search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருவர் உயிரிழப்பு"

    அமைதிப் பூங்காவாக திகழும் ஆஸ்திரேலியா நாட்டின் இரவு விடுதி அருகே மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 பேரில் ஒருவர் உயிரிழந்தார். #Australiashooting ##Australianightclub #Melbourneshooting
    மெல்போர்ன்:

    உலகில் மக்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நாடுகளில் ஒன்றாக அறியப்படும் ஆஸ்திரேலியாவில் நீடித்த நிலையான ஆட்சிமுறை மற்றும் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பான அம்சங்கள் போன்றவற்றுக்கு உத்தரவாதம் உள்ளதால் வெளிநாடுகளுக்கு சென்று வாழ விரும்புபவர்களின் விருப்பத்தேர்வாக இந்நாடு விளங்குகிறது.

    மேலும், வன்முறை, துப்பாக்கி கலாச்சாரத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் போன்றவையும் ஆஸ்திரேலியாவில் மிகவும் குறைவு.

    கடந்த 1996-ம் ஆண்டில் இங்குள்ள போர்ட் ஆர்த்தர் பகுதியில் ஒருவர் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர். கடந்த மார்ச் மாதத்தில் நடந்த 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா தலைநகர் மெல்போர்ன் நகருக்கு உட்பட்ட பிரஹான் பகுதியில் உள்ள இரவு விடுதி வாசலில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர்.



    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் முன்னர் தெரிவித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். #Australiashooting ##Australianightclub #Melbourneshooting
    பாரிஸ் அருகே மர்ம நபர் நடத்திய கத்தி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயமடைந்தனர். #KnifeAttack #ParisAttack
    பாரிஸ்:

    பிரான்சில் அதிகரித்து வரும் கத்திக்குத்து தாக்குதல்கள் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளன. திடீரென பொதுவெளியில் கத்தியுடன் வலம் வரும் மர்ம ஆசாமிகள், தங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடுவிடுகிறார்கள். சில சமயம் போலீசில் சிக்கிவிடுகிறார்கள்.

    கடந்த ஆண்டு பாரிஸ் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமைடைந்தனர். இதில் ஒருசில சம்பவங்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இத்தகைய தாக்குதல்களை முறியடிக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் பாரிசில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டிராப்பர்ஸ் நகரில் இன்று மீண்டும் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர், பொதுமக்களை கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், 2 பேர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.



    இதற்கிடையே கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். #KnifeAttack #ParisAttack

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற ஒருவர், நெடுந்தொலைவு ஓட்டத்தின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #CandidateDies
    ஜாம்ஷெட்பூர்:

    ஜார்க்கண்டில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஜூலை 2-ம் தேதி தொடங்கிய இந்த பணி, ஜூலை 21-ம் தேதி வரை நடக்கிறது.

    ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் சித்கோரா பகுதியில் ஜே.ஏ.பி. மைதானத்தில் நடந்த உடற்தகுதி தேர்வில் ஒரு மணி நேரத்திற்குள் 10 கிலோ மீட்டர் தொலைவு ஓடும்படி தேர்வுக்கு வந்திருந்தவர்களிடம் கூறப்பட்டு உள்ளது. தேர்வில் கலந்து கொண்ட பொகாரோ பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் ஷா (வயது 26) உள்பட 5 பேர் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளனர். அவர்கள் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் ஷா உயிரிழந்து விட்டார்.

    அவர் 23வது அல்லது 24வது சுற்றில் மயங்கி விழுந்து இருக்க கூடும் என போலீஸ் சூப்பிரெண்டு பிரபத் குமார் கூறியுள்ளார்.  நீர்ச்சத்து இல்லாதது அவருக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.  எனினும், உடற்கூறாய்வுக்கு பின்பே சரியான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.

    டெல்லியில் பணிபுரிந்து வந்த ஷா நேராக தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார் என்று போலீசார் ஒருவர் கூறியுள்ளார். #CandidateDies
    ×