என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் ஓல்டு டவுனில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் ஓல்டு டவுனில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தெற்கு போலீஸ் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது ஓல்டு டவுன் மேல்நிலை குடிநீர் தொட்டியின் அருகே மற்றும் மலைப்பாதை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன் (வயது 20), ஏழுமலை (51) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    திருவலத்தை அடுத்த குப்பத்தாமோட்டூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் பாணாவரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார்.

    அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓச்சேரி அருகே ஏற்பட்ட விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    ஓச்சேரியை அடுத்த சித்தஞ்சி அருகே கடந்த 19-ந் தேதி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆனந்தி (40) என்ற பெண் மினிவேனிலிருந்து கீழே விழுந்தார். அதேசமயம் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஆனந்தி தலைமீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (35) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
    ஓச்சேரியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
    காவேரிப்பாக்கம்:

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுஇடங்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் முகக் கவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வருவாய், சுகாதாரம், போலீஸ் துறையினரும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு, பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று ஓச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் சவுந்தரராஜன், பாலாஜி, சுவேதா ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருசக்கர வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற 10 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கி அனுப்பினர்.
    காட்பாடி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள காசிக்குட்டை குமரன் நகரை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகள் மேனகா (வயது 16). நேற்று காலை 10 மணியளவில் வீட்டின் அருகேயுள்ள 60 அடி அழமுள்ள கிணற்றில் மேனகா திடீரென குதித்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் மற்றும் அக்கம், பக்கத்தினர் மேனகாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் படிக்கட்டு இல்லாததால் அவர்களால் கிணற்றில் இறங்க முடியவில்லை.

    இதுகுறித்து காட்பாடி தீயணைப்புத்துறையினருக்கும், விருதம்பட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கயிறு கட்டி கிணற்றின் உள்ளே இறங்கி தேடினர். சிறிது நேரத்துக்கு பின்னர் மேனகாவை பிணமாக மீட்டனர். போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், மேனகாவை அவருடைய தாயார் திட்டியதால் மனமுடைந்து காணப்பட்டதாகவும், அதனால் அவர் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. இதுதொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 1,941 பயனாளிகளுக்கு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உழைக்கும் மகளிர் பணிச்சுமையை எளிதாக்கும் வகையில் அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு மானியத்தொகை உடனடியாக கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளே இந்த திட்டத்தினை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்அடிப்படையில் 2019-2020-ம் ஆண்டிற்கு வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,941 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானியம் விடுவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஓட்டுனர் உரிமம் அல்லது பழகுனர் உரிமம் இருத்தல் வேண்டும். மானியம்பெற ஓட்டுனர் உரிமம் கட்டாயம் இருக்க வேண்டும்.

    முறைசார்ந்த, முறைசாரா பணியில்உள்ள பெண்கள், கடைகள், இதர நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், சிறு கடை உள்ளிட்ட சுயதெழில் செய்யும் பெண்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் அமைப்புகளில் பணிபுரியும் பெண்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், மக்கள் கற்றல்மையம் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோர், ஒப்பந்த ஊழியர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், சமூக சுகாதார பெண் ஆர்வலர்கள் பயன்பெறலாம். அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.

    உள்ளாட்சி நிறுவனங்கள் விண்ணப்பங்கள் வினியோகம்செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கும் தனியாக கவுண்ட்டர்கள் திறக்கவேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை www.tnatws.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, களஆய்வு மேற்கொண்டு உரிய அலுவலரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.

    ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது தகுதியுடையதாக இருப்பின் ஆய்வுசெய்து பயனாளியாக தேர்வு செய்யலாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    வேலூர் சலவன்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டை திருப்பூர் குமரன் 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி இந்துமதி. கணேசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், இந்துமதியிடம் மீண்டும் மதுகுடிக்க பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். அதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இரவு வீட்டின் மின்விசிறியில் கணேசன் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து இந்துமதி அளித்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயக்க ‘ஸ்பிரே’ அடித்து மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். உடல் நலக்குறைவால் மாணவி கடந்த 16-ந்தேதி வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கு அவரின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அதில், மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் வேலூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா மற்றும் சமூகநல ஊழியர் சாந்தி ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர்.

    அதில், கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி கல்லூரிக்கு ரெக்கார்டு நோட்டு கொண்டு வருமாறு தந்தையின் செல்போனில் ஒருவர் தெரிவித்ததாகவும், அதன்பேரில் புறப்பட்டு சென்றபோது கல்லூரி அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மர்மநபர் திடீரென முகத்தில் மயக்க ‘ஸ்பிரே’ அடித்தார். கண்விழித்து பார்த்தபோது ஓர் அறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அருகே கல்லூரியில் பணிபுரியும் பிரதாப் என்பவர் இருந்தார். அவர் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார். அதனால் எனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்று மாணவி தெரிவித்தார்.

    இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதில், தொடர்புடைய வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த கல்லூரி ஊழியர் பிரதாப்பை (வயது 26) பிடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா தீவிர விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர், மாணவியின் முகத்தில் மயக்க மருந்து ‘ஸ்பிரே’ அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்பு கொண்டார். அதையடுத்து ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் பிரதாப் கைது செய்யப்பட்டார்.
    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,395 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின்  எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 13,274 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 121 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,395 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 12,122 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 201 பேர் உயிரிழந்துள்ளனர்.
    கல்லூரிக்கு ரெக்கார்டு நோட்டு கொண்டு வருமாறு செல்போனில் அழைத்து, முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததால், 7 மாத கர்ப்பமாக இருப்பதாக மாணவி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண், பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். உடல்நலக்குறைவால் மாணவி 16-ந்தேதி வடுகந்தாங்கலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு, அவரின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அதில், மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து டாக்டர்கள், அவரிடம் கேட்டதற்கு உரிய பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா மற்றும் சமூக நல ஊழியர் சாந்தி ஆகியோர் அங்குச் சென்று விசாரித்தனர்.

    அப்போது மாணவி கடந்த ஜனவரி மாதம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவருடன் திருமணம் நடந்ததாகவும், கணவர் தற்போது விஜயவாடாவில் இருப்பதாகவும் தெரிவித்தார். மாணவியின் கழுத்தில் தாலி இல்லாததால் சந்தேகம் அடைந்த மைய நிர்வாகி மனநல ஆலோசனை வழங்கினார்.

    அப்போது மாணவி கூறியதாவது:-

    கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி கல்லூரிக்கு ரெக்கார்டு நோட்டு கொண்டு வருமாறு தந்தையின் செல்போனில் பேசிய நபர் தெரிவித்தார். அதன்பேரில் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றேன். கல்லூரி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, பின்னால் வந்த நபர் திடீரென முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்தார்.

    இதனால் மயக்கமடைந்த நான் சில மணிநேரத்துக்கு பின்னர் கண்விழித்து பார்த்தபோது ஒரு அறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அருகில் கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இருந்தார். அவர், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டினார். இதனால் எனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. அவர், என்னை பாலியல் பலாத்காரம் செய்ததால், தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன்.

    இவ்வாறு மாணவி கூறினார்.

    பின்னர் மாணவி தெரிவித்ததைப் புகாராக எழுதி பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகியிடம் அளித்தார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலூர் அருகே கம்ப்யூட்டர் மையம் நடத்தி பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் விவசாயிகளுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக இந்த பணம் செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்களில் ஆயிரக்கணக்கானோர் விவசாயிகள் என்ற பெயரில் முறைகேடாக பணம்பெற்று வந்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள். முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணம் திரும்ப பெறப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் பயன்பெற்று வந்தவர்களில் 3,242 பேர் தகுதியில்லாதவர்கள் என்பதும், ரூ.1 கோடியே 23 லட்சம் முறைகேடு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தகுதியற்றவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து இதுவரை ரூ.70 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டதாக வேலூர் மாவட்ட வேளாண்மைத்துறையில் வேலை பார்த்த 8 தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் கொண்ட பட்டியலை வேளாண்மைத்துறை அதிகாரிகள் சி.பி.சி.ஐ.டி.யிடம் கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் காட்பாடியை அடுத்த திருவலத்தில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்த சந்தோஷ் (வயது 40) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் என்பதும், தனது மாமனார் வீட்டில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி, பொதுமக்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட விவரங்களை பெற்று கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 115 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,277 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின்  எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 13,162 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,277 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 11,987 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 199 பேர் உயிரிழந்துள்ளனர்.
    ×