என் மலர்
வேலூர்
வேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
வேலூரை அடுத்த பொய்கை காலனியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதேபோன்று வேலூரை அடுத்த சத்தியமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் காணவில்லை.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் விஜயகுமார், குணசேகரன் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சென்னை-பெங்களூரு சாலை அப்துல்லாபுரம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள், வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (34), பாபுசேட்டு (26), கஸ்பா மோகன் (21) என்பதும், அந்த மோட்டார் சைக்கிள்கள் விஜயகுமார், குணசேகரனின் திருட்டு போன மோட்டார் சைக்கிள்கள் என்று தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் அருகே பைக் திருடியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர்:
வேலூரை அடுத்த பொய்கை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44), தொழிலாளி.
இவர் வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது பைக் திருட்டு போயிருந்தது. இதேபோன்று வேலூரை அடுத்த சத்தியமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த பைக் திருடு போயிருந்தது.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் விஜயகுமார், குணசேகரன் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சென்னை-பெங்களூரு சாலை அப்துல்லாபுரம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (34), பாபுசேட்டு (26), கஸ்பா மோகன் (21) என்பதும் அவர்கள் ஓட்டி வந்த பைக் விஜயகுமார், குணசேகரனின் திருட்டு போன மோட்டார் சைக்கிள்கள் என்று தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 40 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் உயர்ந்து வருகிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 48,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 46,973 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.1098 பேர் பலியானார்கள். இன்று வேலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் உயர்ந்து வருகிறது.
ஊரடங்கு தளர்வு நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வரவேண்டாம். இதனால் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மத்திய பெண்கள் ஜெயில் காவலரை தாக்க முயன்ற வார்டனை பணியிடை நீக்கம் செய்து ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் மத்திய பெண்கள் ஜெயில் உள்ளது. இங்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி மற்றும் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 100-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயில் வார்டனாக ஞானசவுந்தரி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் பணியில் கவனக்குறைவாக செயல்படுவதாகவும், காவலர்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் உயர்அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து விசாரணை நடத்த உயர்அதிகாரிகள் வார்டன் ஞானசவுந்தரிக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் புகார்கள் தொடர்பாக எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மத்திய பெண்கள் ஜெயிலில் வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஜெயில் காவலர்கள், வார்டன் ஞானசவுந்தரி மீது மீண்டும் புகார்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வார்டனை அழைத்து வரும்படி சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து பெண் ஜெயில் காவலர் ஒருவர் சூப்பிரண்டு அழைப்பதாக வார்டன் ஞானசவுந்தரியிடம் தெரிவித்துள்ளார். அற்கு அவர் ஜெயில் சூப்பிரண்டை சந்திக்க வர முடியாது என்று கூறி உள்ளார். பின்னர் அந்த பெண் ஜெயில் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி திடீரென தாக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து ஜெயில்காவலர், சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினியிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து வார்டன் ஞானசவுந்தரியை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் ஜெயில் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,337 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 48,868 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்ளிட்ட இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 34 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையில் மேலும் 32 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,098 பேர் பலியாகி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,337 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 48,868 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 11 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் தாசில்தார் செந்தில் தலைமையில் வருவாய் அலுவலர் திவ்யா ப்ரணவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று வேலூர் சுண்ணாம்புகார தெருவில் உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் முகப்பு பகுதியில் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்று பார்வையிட்டனர். இந்த ஆய்வில், முககவசம் அணியாத கடை ஊழியர்கள் 3 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் அருகருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் வாங்கி செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
வேலூர் தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 11 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது என்று தாசில்தார் தெரிவித்தார்.

பெண் போலீசாருக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்விற்கு 354 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் நேற்று வேலூர் நேதாஜி மைதானம் முன்பு திரண்டனர்.
காட்பாடி:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக 2-ம் நிலை காவலர் மற்றும் இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 26-ந்தேதி தொடங்கியது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில், 1,610 பேர் 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். நேற்று முன்தினத்துடன் அவர்களுக்கு உடல் தகுதி தேர்வுகள் நிறைவு பெற்றது.
பெண் போலீசாருக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்விற்கு 354 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் நேற்று வேலூர் நேதாஜி மைதானம் முன்பு திரண்டனர்.
வேலூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக நேதாஜி மைதானத்தில் மழைநீர் குளம்போல தேங்கி கிடந்தது.
இதனால் நேதாஜி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்கள் தேர்வு செய்யும் பணி காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டது.
நேதாஜி மைதானத்திற்கு வந்த பெண்கள் அனைவரும் வாகனங்கள் மூலம் வி.ஐ.டி. பல்கலைக்கழக மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வைத்து உடற்தகுதி தேர்வுகள் நடந்தது.
குண்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றின் மூலம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
காவலர் தேர்வு நடப்பதால் வி.ஐ.டி. பல்கலைக்கழக மைதானத்தில் மற்றவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதியாக மருத்துவ பரிசோதனை மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சி.எம்.சி ஆஸ்பத்திரி டாக்டர் ஜேக்கப்ஜான் தலைமையிலான குழுவினர் 2 கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்:
கொரோனா பரவலை தடுக்கவும், உயிர் சேதத்தை தவிர்க்கவும் தடுப்பூசி மிகப்பெரிய உபயோகமாக உள்ளது. தற்போதைய சூழலில் முதலாவது தவணையிலும், 2-வது தவணையிலும் ஒரே வகை தடுப்பூசியை மட்டுமே செலுத்திக்கொள்வதற்கு மட்டுமே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு ஓர் ஆய்வு முடிவை ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டது.

கோவேக்சின் தடுப்பூசி செயலிழந்த கொரோனா வைரஸ் தீ நுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது.
இந்த இரு தடுப்பூசிகளையும் மாறி மாறி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி விண்ணப்பித்திருந்தது. அதற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சி.எம்.சி ஆஸ்பத்திரி டாக்டர் ஜேக்கப்ஜான் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நபருக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இருவேறு கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்துவது தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூரில் 600 தன்னார்வலர்களுக்கு இருவேறு தடுப்பூசிகளையும் செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்த பின்னர் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என சி.எம்.சி. நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அதில், முதல் தவணையில் ஒரு வகை தடுப்பூசியையும், 2-வது தவணையில் மற்றொரு வகை தடுப்பூசியும் செலுத்தினால் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகமாக உருவாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொருத்தவரை சிம்பன்ஸியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட அடினோ வைரஸ் மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்து அதனை மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவேக்சின் தடுப்பூசி செயலிழந்த கொரோனா வைரஸ் தீ நுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது.
இந்த இரு தடுப்பூசிகளையும் மாறி மாறி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி விண்ணப்பித்திருந்தது. அதற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சி.எம்.சி ஆஸ்பத்திரி டாக்டர் ஜேக்கப்ஜான் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நபருக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இருவேறு கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்துவது தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூரில் 600 தன்னார்வலர்களுக்கு இருவேறு தடுப்பூசிகளையும் செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்த பின்னர் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என சி.எம்.சி. நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்...நேற்றை விட 36 சதவீதம் அதிகம்... இந்தியாவில் புதிதாக 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,247 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 3-வது அலை பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடத்தில் முகக் கவசம் அணியாத நபர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 24 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்றைய பரிசோதனையில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,247 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46,868 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1096 பேர் பலியாகி உள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடுகத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த வளையல் காரப்பட்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கஸ்தூரி (வயது 56). இவர் நேற்று முன்தினம் வீட்டு முன்பு தண்ணீரை கொண்டு சுத்தம் செய்தார். அப்போது பைப்பில் அடைப்பு ஏற்பட்டதால் பைப்பை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது பைப்பில் இருந்த பாம்பு அவரை கடித்துள்ளது. இதனால் கஸ்தூரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி சாணாங்குட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த பேரணாம்பட்டு கள்ளிச்சேரியைச் சேர்ந்த முருகையன்(வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொதுமக்களுக்கு மருந்து பெட்டகங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நேற்று முன்தினம் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று பேரணாம்பட்டு ஒன்றியம் எம்.வி.குப்பம் கிராமத்தில் தொற்றா நோய் உள்ளவர்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சர்க்கரை, ரத்த அழுத்தம் நோய்க்கான மருந்து பெட்டகங்களை வழங்கி, ஆய்வு செய்து பொதுமக்களிடம் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கொத்தப்பல்லி கிராமத்தில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.42.9 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கொத்தப் பல்லி - ஓங்குப்பம் தார் சாலையை பார்வையிட்டு, தரம், அளவு குறித்து ஆய்வு செய்தார்.
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய வரைப்படம், பதிவேடுகளை ஆய்வுசெய்து, தாலுகா அலுவலகத்தில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி மனுக்கள் குறித்து ஆய்வு செய்து மனுக்கள் மீது விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், சப்- கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் வெங்கடேசன், வட்டார மருத்துவ அதிகாரி கலைச்செல்வி, ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, கோபி, ஒன்றிய உதவி பொறியாளர்கள் குகன், சிலம்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.