search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    நேற்றை விட 36 சதவீதம் அதிகம்... இந்தியாவில் புதிதாக 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கடந்த 24 மணி நேரத்தில் 40013 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  38,353  பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 36 சதவீதம் அதிகம் ஆகும். நேற்று 28,204 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. மொத்த பாதிப்பு 3,20,36,511 ஆக உள்ளது.

    தினசரி பாதிப்பு விகிதம் 2.16 சதவீதமாக உள்ளது. கடந்த 16 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

    கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 497 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,29,179 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பரிசோதனை

    கடந்த 24 மணி நேரத்தில் 40013 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31220981 ஆக உயர்ந்துள்ளது. குணமடையும் விகிதம் 97.45 சதவீதமாக  அதிகரித்துள்ளது.

    நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,86,351 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 51,90,80,524 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 41,38,646 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
    Next Story
    ×