search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    வேலூரில் முககவசம் அணியாத கடை ஊழியர்களுக்கு அபராதம்

    வேலூர் தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 11 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் தாசில்தார் செந்தில் தலைமையில் வருவாய் அலுவலர் திவ்யா ப்ரணவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று வேலூர் சுண்ணாம்புகார தெருவில் உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் முகப்பு பகுதியில் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்று பார்வையிட்டனர். இந்த ஆய்வில், முககவசம் அணியாத கடை ஊழியர்கள் 3 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் அருகருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் வாங்கி செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

    வேலூர் தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 11 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது என்று தாசில்தார் தெரிவித்தார்.
    Next Story
    ×