என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வேலூர் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,247 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 3-வது அலை பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடத்தில் முகக் கவசம் அணியாத நபர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 24 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்றைய பரிசோதனையில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,247 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46,868 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1096 பேர் பலியாகி உள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×