என் மலர்
செய்திகள்

கைது
குடியாத்தம் அருகே சாராயம் விற்றவர் கைது
குடியாத்தம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி சாணாங்குட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த பேரணாம்பட்டு கள்ளிச்சேரியைச் சேர்ந்த முருகையன்(வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
Next Story






