என் மலர்
வேலூர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழையினால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரத்தில் உள்ள பெரிய ஏரி மற்றும் சிறிய ஏரி நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேறி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. துத்திப்பட்டு ஊராட்சியில் கால்வாய் தூர்ந்து போனதால் அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் அதனை சுற்றியுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆம்பூர் பேரணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் வாகனங்கள் வரிசையாக நின்றது.
உமராபாத் போலீசார் விரைந்து சென்று அம்பேத்கர் நகர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


வேலூர் அடுத்த அன்பூண்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் கட்டிட பணிக்கு கம்பி வேலை செய்து வந்தார். இவரது மனைவி யமுனா. தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை கார்த்தி வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு மாலை பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அன்பூண்டி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
பைக்கில் வேகமாக வந்த கார்த்தி நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதினார். இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்தி தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கீழ சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 39). சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் மாரியம்மன் கோவில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது செல்போன் மற்றும் ரூ.300 பணத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து பிரபு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாரியம்மன்கோவிலை சேர்ந்த நாகராஜ்(22), நாடியாப்பிள்ளை தெருவை சேர்ந்த குருமூர்த்தி(24) ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.300 பணமும் மீட்கப்பட்டது. மேலும் வழிப்பறிக்கு உபயோகப்படுத்திய மோட்டார் சைக்கிளிலும் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பிளஸ்-2 மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய் விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த மாணவி பயன்படுத்திய செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து நடத்திய விசாரணையில் ேக.வி.குப்பத்தை அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவருடைய மகன் சுகேஷ்குமார் (வயது 20) என்பவர் அதிகமுறை பேசியது தெரியவந்தது.
நாகல் கிராமத்தில் சுகேஷ்குமார் இருப்பதை அறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த மாணவியுடன் சுகேஷ்குமார் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மிஸ்டுகால் மூலம் கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்ததும், அந்த மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி சில தினங்களுக்கு முன் கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து மாணவியை மீட்டு சுகேஷ்குமாரை போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணி முதல் மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலையிலும் மழை பெய்துவருகிறது. பரவலான மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. காட்பாடி வி.ஜி.ராவ் நகர் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. குடியாத்தம், பேர்ணாம்பட்டு. பள்ளிக்கொண்டா, கே.வி.குப்பம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்திலும் இன்று காலை மழை பெய்தது. அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜா, சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டையிலும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
பனப்பாக்கம் நெமிலி பகுதிகளில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதமடைந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் பகுதிகளில் இன்று காலை தொடர்ந்து மழை பெய்தது. ஆம்பூரில் ஏரி தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்ததால் பேர்ணாம்பட்டு சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
திருவண்ணாலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், கண்ணமங்கல், செங்கம், கீழ்பென்னத்தூர், வேட்டவலம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. செய்யாறு, கண்ணமங்கலத்தில் மழை வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளது. தாழ்வான இடங்களிலுள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு புவனேஸ்வரி (வயது 21) மற்றும் 2 மகன்கள். புவனேஸ்வரி காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மணிகண்டன் (28) என்பவருக்கும் கடந்த 15-ந்தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து புதுமண தம்பதி மணமகள் வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி உள்பட அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் புவனேஸ்வரியின் பாட்டி பாப்பாம்மாள் கழிவறைக்கு செல்ல முயன்றார். அப்போது, கழிவறையின் கதவை அவரால் திறக்க முடியவில்லை.
அதையடுத்து அவர் தூங்கிக்கொண்டிருந்த பேரன் சிவாவை எழுப்பி கழிவறை கதவை திறக்க சொன்னார். சிவா கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் கதவை தட்டி போதும் உள்ளே இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
அதைத்தொடர்ந்து சிவா வீட்டின் வெளியே சென்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். உள்ளே சேலையால் தூக்குப்போட்டு புவனேஸ்வரி தொங்கி கொண்டிருந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவா கதறி அழுதார். உடனே குடும்பத்தினர், புவனேஸ்வரியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதைக்கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், புவனேஷ்வரிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. அவர் தொடர்ந்து படிக்க விரும்பி உள்ளார். ஆனால் அவரது பெற்றோர் நல்ல வரன் என்பதால் மணிகண்டனை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளனர். அவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்னர் மணிகண்டன் செல்போனில் 3 முறை புவனேஸ்வரியிடம் பேசி உள்ளார். ஆனால் புவனேஸ்வரி ஒருமுறை கூட மணிகண்டனுக்கு போன் செய்து பேசியது இல்லை என்று கூறப்படுகிறது.
விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
பழனியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அதனை அகற்ற முடியாமல் பொதுமக்கள் பாத்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றினர். இதே போல் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடி, வீரபாண்டி, உத்தம பாளையம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தது. இதனால் வராக நதி உள்பட வைகை ஆற்றின் கரையோரப்பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அனைத்து அணைகளும் நிரம்பி விட்டதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு குளங்கள் மற்றும் கண்மாய்களில் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. கன மழை காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையிலும் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
1) மற்ற தியானங்களைப் போலவே அமைதியான ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம் திறந்திருக்கும் படி தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். கைகளின் கட்டை விரலின் அடிப்பாக நுனியில் சுட்டு விரல் நுனியை வைத்து ஒரு முத்திரையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.
2) உங்கள் மூலாதாரச் சக்ராவை மனதில் அந்தச் சின்னமாகவோ அல்லது சிவப்பு நிறச் சக்கரமாகவோ உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் சிறிது நேரம் தேவைப்படலாம். அவசரமில்லாமல் அமைதியாக உருவகப்படுத்திக் கொண்டு உங்கள் கவனத்தை அந்த சக்ராவிற்கு கொண்டு செல்லுங்கள்.
மனதில் இந்த சக்ரா சின்னமாகவோ, சிவப்பு நிற சக்கரமாகவோ பதிந்த பின்னர் “ஓம் மூலாதார” என்று சத்தமாகவோ, மனதிற்குள்ளோ சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது லா........ம்/ங் என்ற மந்திரத்தை சத்தமாகவோ, மனதிற்குள்ளோ நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள்.
இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இப்படி லா........ம்/ங் மந்திரத்தை ஒரு முறையிலிருந்து ஏழு முறை வரை வெளிமூச்சு விடும் போது உச்சரிக்கலாம். இதைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனமும் இந்த சக்ராவிலேயே இருக்கட்டும். (நீங்கள் இந்த மந்திரத்தை எத்தனை முறை இந்த சக்ராவிற்குச் சொல்கிறீர்கிறீர்களோ அத்தனையே முறை தான் மற்ற ஆறு சக்ராக்களுக்கும் உரிய மந்திரத்தை நீங்கள் சொல்ல வேண்டும்.) முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்
3) அடுத்ததாக உங்கள் கவனத்தை சுவாதிஷ்டானா சக்ரா அமைந்துள்ள இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அந்த சின்னமாகவோ, ஆரஞ்சு நிற சக்கரமாகவோ அந்த சக்ராவை அந்த இடத்தில் மனக்கண்ணில் காணுங்கள். உங்கள் உருவகம் தெளிவான பின் “ஓம் ஸ்வாதிஸ்தான” என்று சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது வா........ம்/ங் என்ற மந்திரத்தை நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இந்த மந்திரத்தையும் நீங்கள் மூலாதார மந்திரத்தை எத்தனை முறை சொன்னீர்களோ அத்தனை முறை சொல்ல வேண்டும். முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்.
4) இதே போல் மற்ற சக்ராக்களுக்கும் செய்தல் வேண்டும். மணிப்புரா சக்ராவுக்கு அந்த சின்னம் அல்லது மஞ்சள் நிற சக்கரம் நினைத்து “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்லி ரா........ம்/ங் என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் அனாஹத, ஓம் விஷுத்தி, ஓம் ஆஜ்னேய, ஓம் சஹஸ்ரார என்று சொல்லி, அந்தந்த சின்னங்கள் அல்லது அந்தந்த நிறச் சக்கரங்களை எண்ணி, முறையே யா........ம்/ங், ஹா.......ம்/ங், ஓ.......ம் (a…u….m), ஓ...கூம்...சத்யம்....ஓ...ம்” என்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.
5) சக்ராக்களின் பெயர்களைச் சொல்வதில் மணிபுரா சக்ராவிற்கு மட்டும் “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் என்று சொல்லி அந்தந்த சக்ராவின் பெயரையே சொல்ல வேண்டும். அதே போல் மந்திர ஒலிகள் உச்சரிப்பதில் சஹஸ்ராரா சக்ராவுக்கு மட்டும் ’ஓகூம் சத்யம் ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்ல் வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு முன்பு நாம் சொன்ன மந்திரங்கள் தான். இந்த இரு வித்தியாசங்களைத் தவிர எல்லா சக்ராக்களையும் எண்ணி சக்ரா தியானம் செய்வது ஒரே மாதிரி தான். இதை நினைவில் கொள்ளவும்.
இந்த சக்ரா தியானம் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒவ்வொரு சக்ராவுக்கும் சமமான முக்கியத்துவத்தைத் தருவது முக்கியம். ஒரு சங்கிலியின் உண்மையான வலிமை அதன் மிக பலவீனமான பகுதியைப் பொறுத்தே இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு பகுதி மிக வலிமையாக இருந்து இன்னொரு இணைப்பு மிக பலவீனமாக இருந்தால் அந்த இடத்தில் அது சுலபமாகத் துண்டிக்கப்படும் அல்லவா? அது போலத் தான் சக்ராக்களும். எல்லா சக்ராக்களையும் சமமாக பாவித்து ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளியுங்கள்.
(குறிப்பு: கூடுமான அளவு எளிமையாக இந்த தியான செய் முறை விளக்கப்பட்டு இருந்தாலும் தகுந்த பயிற்சியாளர்களிடம் இருந்து இந்த தியானத்தைக் கற்றுக் கொள்வது சிறந்தது)
(குண்டலினி சக்தியை மேலுக்குக் கொண்டு வருவதும் இந்த சக்ராக்கள் மூலமாகத் தான். மூலாதார சக்ராவில் உறங்கிக் கிடக்கும் குண்டலினியை சஹஸ்ரார சக்ராவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முறையான பயிற்சியும், கடுமையான கட்டுப்பாடும், தகுந்த சுத்தமான சூட்சுமமான மனநிலையும் இருப்பது மிக அவசியம். அதில் ஏதாவது சிறு குறைகள் ஏற்பட்டால் கூட பெரிய ஆபத்தை அவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே முறையாக சரியாக தயார்ப்படுத்திக் கொள்ளாமல், உண்மையான நிபுணரின் கண்காணிப்பில் அல்லாது முயற்சி செய்வதும் ஆபத்தே. குண்டலினியை நான் எழுப்பிக் காட்டுகிறேன் என்று பலரும் இணையத்திலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வதை உடனே நம்பி ஏமாந்து விடாமல் இருப்பது நல்லது. மிகச் சிலரே உண்மையில் அதில் தேர்ச்சி பெற முடியும் என்பதையும் அதிலும் வெகுசிலரே பொது வாழ்வில் காணக் கிடைப்பார்கள் என்பதையும், அவர்களும் கூட தகுதிகளை பரிசோதித்து தெளிவடையாமல் கற்றுக் கொடுக்க முனைய மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைக்கவும்.)
இந்த சக்ரா தியானம் உடலின் எல்லா சக்ராக்களையும் சூட்சுமமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியம், வலிமை, அறிவு, ஞானம் ஆகிய அனைத்துமே சக்ரா தியானம் செய்யச் செய்ய மேம்படும் என்பது உறுதி.
வேலூரில் வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்கள் திருடப்பட்டு வந்தன. இது சம்பந்தமாக வேலூர் வடக்கு தெற்கு சத்துவாச்சாரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆட்டோ திருட்டு கொள்ளை நடந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஆட்டோவை திருடி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பழைய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது44) எனவும், வேலூரில் ஆட்டோக்களை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை குடியாத்தம் கிளை சிறையில் அடைத்தனர். குடியாத்தத்தில் இருந்து நேற்று முன்தினம் வேலூர் ஆண்கள் ஜெயிலில் ரமேஷை அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ரமேஷுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சிறைத்துறையினர் ரமேசை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாகாயம் போலீசில் சிறை துறை சார்பில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு பகுதியில் வசித்து வருபவர் மூசா. தொழில் அதிபரான இவர் செம்மரக்கட்டைகளை வாங்கி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த மாதம் வீட்டில் இருந்த போது துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மூசாவின் மகன் பஷீரை தொடர்பு கொண்டு பேசிய கடத்தல் கும்பல் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியது. கடைசியாக ரூ.25 லட்சம் கொடுத்தால் மூசாவைவிட்டு விடுவதாக கூறிய கடத்தல் கும்பல் எழும்பூருக்கு வந்த போது சிக்கியது. இது தொடர்பாக பெண் உள்பட சிலர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் வழக்கில் யார்- யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றி போலீசார் மேலும் விசாரித்தனர். அப்போது எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடி மோகனுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
எண்ணூரில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் மோகன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.`






