என் மலர்
செய்திகள்

பழனியில் கொட்டித்தீர்த்த கனமழையினால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்ட காட்சி.
தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய விடிய மழை- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தது. இதனால் வராக நதி உள்பட வைகை ஆற்றின் கரையோரப்பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
பழனியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அதனை அகற்ற முடியாமல் பொதுமக்கள் பாத்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றினர். இதே போல் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடி, வீரபாண்டி, உத்தம பாளையம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தது. இதனால் வராக நதி உள்பட வைகை ஆற்றின் கரையோரப்பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அனைத்து அணைகளும் நிரம்பி விட்டதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு குளங்கள் மற்றும் கண்மாய்களில் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. கன மழை காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையிலும் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story