என் மலர்
வேலூர்
வேலூர்:
ஆந்திரா- தமிழகத்தில் பெய்த கனமழையால் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம் வழியாக பாலாற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள வட விரிஞ்சிபுரம் காமராஜபுரத்தில் 191 வீடுகள் உள்ளன. இதில் பாலாற்றங்கரையில் வலது பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூட தெருவில் ஆற்றின் கரையோரமாக 28 வீடுகள் இருந்தன. இவற்றில் 130-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
கடந்த 17-ந்தேதி முதல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவரையும் வருவாய்த் துறையினர் வெளியேற்றினர். அவர்கள் வட விரிஞ்சிபுரம் வேளாண் விரிவாக்க மையம் மற்றும் வடுகன்தாங்கல் உயர்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் ஏற்பட்டது. இதில் ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டிருந்த 28 வீடுகளில் 12 வீடுகள் மண் அரிப்பால் அடுத்தடுத்து சரிந்து ஆற்றுக்குள் விழுந்தன. இன்று காலையில் மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது. 13 வீடுகள் ஆற்றுக்குள் இடிந்து விழுந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றுக்குள் விழுந்த வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது.
வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர்.
தங்களின் வீடுகள் எல்லாம் தங்கள் கண் முன்பாகவே இடிந்து விழுந்தது கண்டு பொதுமக்கள் அழுது துடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி காட்பாடி டி.எஸ்.பி. பழனி, தாசில்தார் சரண்யா மற்றும் கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
அந்த ஊரில் வசிக்கும் அனைவருக்கும் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
பள்ளிக்கூடத் தெருவில் மீதம் உள்ள வீடுகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி கொண்டு உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ஆற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால் மீதமுள்ள 15 வீடுகளும் இடிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு வீடு ரூ.40 லட்சம் செலவில் சமீபத்தில் தான் கட்டப்பட்டது. ஒரு வாரத்தில் கிரகப்பிரவேசம் நடத்த உள்ளதாக அந்த பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஆந்திராவில் பெய்த கனமழையால் விஜயவாடா- சென்னை சாலையில் பாலம் துண்டிப்பு
உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். அதேபகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது.
இது அந்த பெண்ணின் 4 வயது சிறுவனுக்கு தெரிந்தது.
இந்தநிலையில் 4 வயது சிறுவனை அஜித்குமார் வாயில் துப்பாக்கி வைத்து மிரட்டி உள்ளார். அவர் துப்பாக்கியை வைத்து மிரட்டுவது வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியானது. 25 வினாடிகளை கொண்டது அந்த வீடியோ.
துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டுவதை அஜித்குமார் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அவர்தான் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்துதான் போலீசார் அவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை சிறுவன் தனது தந்தையிடம் சொல்லிவிடுவான் என பயந்துதான் துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டியது தெரிய வந்தது.
அப்போது அவர் சுய நினைவு இல்லாமல் போதையில் இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். சிறுவனின் தந்தை வியாபாரி ஆவார். வேலை விஷயமாக அவர் வெளியூர் சென்று உள்ளார். இந்த வீடியோவை பார்த்துதான் அவருக்கும் இந்த சம்பவம் பற்றி தெரிய வந்தது.
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை சற்று ஓய்ந்ததுள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.
வட கிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது.
இதேபோல் ஆந்திராவில் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், பொன்னை ஆற்றில் அதிகபட்சமாக விநாடிக்கு சுமார் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பொன்னை ஆற்றின் இரு கரையை தொட்டபடி பாலாற்றில் கலந்தது.
இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்று வரலாற்றில் 1903-ம் ஆண்டுக்கு பிறகு 118 ஆண்டுகள் கழித்து விநாடிக்கு சுமார் 1 லட்சத்து,40 ஆயிரத்து 54 கன அடி வெள்ளநீர் பெருக்கெடுத்து இரு கரையையும் தொட்டபடி சீறிப்பாய்ந்தோடியது. வரலாறு காணாத வெள்ளத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கண்டுகளித்தனர்.
தற்போது பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை பாலாற்றில் 48 ஆயிரம் கனஅடி வெள்ளம் வந்தது. பொன்னை ஆற்றில் 11,687 கனஅடியாக குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, வாலாஜா அணைக்கட்டு நீர்த் தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 51,593 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 369 ஏரிகளில் 265 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. மீதமுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
காவேரிப்பாக்கம், கலவை, பூண்டி, மகேந்திரவாடி, மூதூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வடமாவட்டங்களின் விவசாயத்தை வளமாக்கி ஜீவாதாரமாக விளங்கும் பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ தொலைவுக்கு பயணித்து வயலூர் முகத்துவாரத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கரையை கடந்த நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் பாலாறும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகபட்ச அளவை எட்டியது.
ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பயணித்து பாலாற்றுடன் கலக்கும் நீவா என்ற பொன்னை ஆற்றில் 1930-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக 60,000 கன அடிக்கு நீர்வரத்து இருந்தது.
இந்த ஆற்றில் இன்று அதிகாலை முதல் மீண்டும் 40 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொன்னை தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.
இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை பாலத்துக்கு கீழே தண்ணீர் சென்றதால் பாலத்தில் நடந்து செல்ல மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதுதான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
மரத்தின் ஒரு பகுதியில் தூண்கள் அப்படியே இறங்கி உள்ளது. தொடர்ந்து பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பொன்னை ஆற்றின் மேற்கு கரைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு வசிக்கும் மக்கள் அன்றாட தேவைக்கும் அலுவலகங்கள் ஆஸ்பத்திரி என அனைத்துக்கும் பொன்னை தான் வரவேண்டும்.

பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1855-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான அணைகளில் ஒன்றாகும். அணையின் உயரத்தைவிட 3 அடி அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தோடியது.
தமிழகத்தில் 222 கி.மீ பயணிக்கும் பாலாற்றில் வாலாஜா அருகே 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அணை கட்டும் பணியை தொடங்கினர். 1858-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அணையில் 4825.2 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் 14,309 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
சுமார் 163 ஆண்டுகள் பழமையான அணையை கடந்து நேற்று முன்தினம் உச்சபட்ச அளவாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 54 கன அடி நீர் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கடந்துள்ளது.
பாலாற்றின் கிளை நதிகளான அகரம் ஆறு, மலட்டாறுகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடிக்கு மேல் சீறி பாய்ந்து வரும் வெள்ளம் பாலாற்றில் கலந்து ஓடுகிறது.
பொன்னை ஆறு, பாலாறு சந்திக்கும் இடத்தில் கடல் போல் காட்சியளிக்கிறது. ராணிப்பேட்டை பாலாற்றில் இன்று காலை சுமார் 70 ஆயிரம் கன அடி வெள்ளம் பாய்ந்து ஓடி சென்றது.
1903-ம் ஆண்டு 504.23 கன அடி வெள்ளத்தால் பாலாறு அணைக்கட்டு சேதமடைந்துள்ளது. இதை 1905-ம் ஆண்டு சரி செய்துள்ளனர். 1903-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் வாணியம்பாடி நகரம் நீரில் மூழ்கியதுடன் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
திடீர் வெள்ளத்தால் பாலாறு வாணியம்பாடி நகரில் மூன்றாக பிரிந்து மீண்டும் ஆம்பூர் அருகே ஒன்றாக சேர்ந்து அகண்ட பாலாறாக பயணிக்கிறது. பெருவெள்ளத்தால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்தனை தரைப்பாலங்களும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
1903-ம் ஆண்டு வந்த பெரு வெள்ளத்தையும் தாண்டி 118 ஆண்டுக்கு பிறகு பாலாற்று வெள்ளம் புதிய வரலாறு படைத்துள்ளது.
பாலாற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் பெருவெள்ளத்தை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். பாலங்களில் நின்று குழந்தைகளுடன் செல்பி எடுத்து வருகின்றனர். இது போன்ற வேடிக்கை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையடுத்து முருகன், வள்ளி தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை கானாற்றில் நேற்று இரவு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புதுவீதி, குல்ஷார் வீதி, அஜிஜியா வீதிகளில் கானாற்று வெள்ளம் புகுந்தது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளிவாசல், மசூதி மற்றும் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தொடர்மழை பெய்து வருவதால் அஜிஜியா வீதியில் உள்ள பொதுமக்கள் மாடிகளில் வீடுகளில் தங்கினர்.
இந்த வீதியிலுள்ள யுனானி வைத்தியர் மர்கூப் அஸ்லாம் அன்சாரி என்பவருடைய வீட்டில் அவரது மனைவி அனிஷா பேகம் (வயது63) மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மாடியில் ஆசிரியை கவுசர் (45) அவரது மகள் தன்ஷிலா (27) ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று இரவு பலத்த மழை பெய்து தெருவில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழையின் காரணமாக வாடகைக்கு குடியிருந்த கவுசர் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் அனுஷா பேகம் வீட்டில் வந்து தங்கினர்.
மேலும் அக்கம் பக்கத்தினரும் அந்த வீட்டிற்கு வந்தனர். மொத்தம் 18 பேர் அந்த வீட்டில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை 6.15 மணிக்கு திடீரென வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானது தெரியவந்தது.
அனிஷா பேகம்(63) இவரது மருமகள்கள் ரூஹினாஷ் (27), மிஸ்பா பாத்திமா(22),
பேரன்கள் மனுலா(8), தமீத்(2),
பேத்திகள் ஹபீரா(4), ஹப்ரா(3),
ஆசிரியை ஹவுசர்(45), தன்ஷிலா(27).
9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பேரணாம்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்டனர்.
முகமது கவுசிப், முகமது தவுசிக், சன்னு அகமது, அபிப் ஆலம், இலியாஸ் அகமது, ஹாஜிரா, நாசிரா, ஹாஜிரா நிகாத், மொய்தீன் (6) ஆகிய 9 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதில் ஹாஜிரா நிகாத், மொய்தீன் ஆகியோர் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன், உதவி கலெக்டர் தனஞ்சயன் தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இந்த சம்பவம் பேரணாம்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரணாம்பட்டு, ரங்கம்பேட்டு, கானாற்று வெள்ளத்தால் அந்த பகுதியில் 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மழை பெய்து வருவதால் பழமையான வீடுகளில் தங்கி உள்ள பொதுமக்கள் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள முகாம்களில் வந்து தங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று காலை கோவில் சன்னதி 4 மணி அளவில் திறக்கப்பட்டு அங்கு பல்வேறு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நேற்று முதல் நாள் கார்த்திகை தினம் முதல் 48 நாட்கள் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் பஜனை நடத்தி அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும். ஆர்வத்துடன் அதிகமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாலை அணிவித்துக் கொண்டனர்.
இது குறித்து ரெகுநாதபுரம் வல்லபை கோவிலின் தலைமை குரு மோகன் கூறியதாவது:- கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வழிபட முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அரசு அனுமதித்தபடி கட்டுப்பாடுகளுடன் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சபரிமலைக்கு சென்று வழிபட அழைத்துச் செல்லப்படுவார்கள்.
கடந்த காலங்களில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாமல் ரெகுநாதபுரத்தில் உள்ள வல்லபை ஐயப்பன் கோவிலில் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். எதிர்வரும் காலங்களில் வல்லபை ஐயப்பன் ஆலயத்தை மேலும் விரிவுபடுத்தி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வழிபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
குடியாத்தம்:
குடியாத்தம் நகர, ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டிகள் சார்பில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நடேச தமிழார்வனை படுகொலை செய்த சமூக விரோதிகளை கண்டித்தும் கொலைகாரர்கள் வாழும் மாநிலமாக அனுமதிக்கூடாது என்பதை வலியுறுத்தி குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் துரை செல்வம் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் ஆனந்தன், விநாயகம், தங்கவேலு, வேலாயுதம், பிரேம்குமார், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.






