என் மலர்
செய்திகள்

ஆர்ப்பாட்டம்
குடியாத்தத்தில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சமூக விரோதிகளை கண்டித்தும் கொலைகாரர்கள் வாழும் மாநிலமாக அனுமதிக்கூடாது என்பதை வலியுறுத்தி குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தம்:
குடியாத்தம் நகர, ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டிகள் சார்பில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நடேச தமிழார்வனை படுகொலை செய்த சமூக விரோதிகளை கண்டித்தும் கொலைகாரர்கள் வாழும் மாநிலமாக அனுமதிக்கூடாது என்பதை வலியுறுத்தி குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் துரை செல்வம் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் ஆனந்தன், விநாயகம், தங்கவேலு, வேலாயுதம், பிரேம்குமார், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Next Story






