search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    விளைநிலங்களில் அமைக்கப்படும் அதிக மின்னழுத்த மின்வேலியால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

    வனத்தில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது குடிநீருக்காகவும், மேய்ச்சலுக்காகவும் அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது.
    உடுமலை:

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தையொட்டி சுமார் 49 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் உள்ளன. விவசாயிகள் மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். 

    இந்தநிலையில் அவ்வப்போது விளைநிலங்குகளுக்குள் புகும் மான்கள், முள்ளம்பன்றி, காட்டுபன்றி உள்ளிட்ட விலங்கினங்கள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 

    இதனால் பயிர்கள் சேதமடைவதைத்தடுக்கும் வகையில் விளைநிலத்தைச் சுற்றி முள்கம்பி வேலி மற்றும் சோலார் மின் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.

    இருப்பினும் சிலர் அதிக மின்னழுத்தம் பாயும் கம்பி வேலி அமைப்பதாகவும் புகார் எழுகிறது. எனவே வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு  மின்வேலி அமைப்பதை கண்டறிந்து தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-

    வனத்தில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது குடிநீருக்காகவும், மேய்ச்சலுக்காகவும் அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. 

    இதனைத்தடுக்க ஒரு சிலர் முள்கம்பி வேலி மற்றும் சோலார் மின் கம்பி வேலிகளை அமைத்துள்ளனர். ஆனால் அதிக மின்னழுத்தம் பாயும் கம்பி வேலி அமைக்கக்கூடாது. இதனால் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. 

    வனத்துறையினரின் கண்காணிப்பு அவசியம். வனத்தை ஒட்டி அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    Next Story
    ×