search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னத்தூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள்.
    X
    குன்னத்தூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள்.

    குன்னத்தூர் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு

    அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து இருப்பதால் ஆடு மாடுகளுக்கு தேவையான தீவனம் கிடைக்கிறது.
    குன்னத்தூர்:

    குன்னத்தூர் சந்தையானது கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தை ஆகும். இங்கே விலை பொருள்களைத் தவிர செம்மறியாடு, வெள்ளாடு, கோழி, கறி கோழி, கட்டு சேவல் அதிகமாக விற்பனைக்கு வரும். ‌இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் காடுகள் அதிகம் இருப்பதால் கால்நடைகளை அதிகம் வளர்த்து வருகிறார்கள். 

    குன்னத்தூர் பகுதியில் வளர்த்து வரும் வெள்ளாடு செம்மறியாடுகளை குன்னத்தூர் சந்தைக்கு தான் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். மேலும் மேட்டூர், மேச்சேரி, பவானி, அந்தியூர் போன்ற வெளியூர்களில் இருந்து அதிக அளவில் குன்னத்தூர் சந்தைக்கு வெள்ளாடுகள் விற்பனைக்கு வரும். தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து இருப்பதால் ஆடு மாடுகளுக்கு தேவையான தீவனம் கிடைக்கிறது. 

    ஆகவே நேற்று குன்னத்தூர் சந்தைக்கு செம்மறி மற்றும் வெள்ளாடுகள் குறைவாகவே விற்பனைக்கு வந்திருந்தன. வாரா வாரம் ரு.50 லட்சத்திற்கு வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனையாகும். நேற்று நடைபெற்ற சந்தையில் ரூ. 10 லட்சத்திற்கு மட்டும் ஆடுகள் விற்பனையாகியுள்ளன.
    Next Story
    ×