search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Business man kidnap"

    • சுப்ரமணியன் கடனுக்கு ரூ.90 லட்சம் கட்டிய நிலையில், மேலும் ரூ.70 லட்சம் கேட்டு சரண்யா தரப்பினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • அவர் கொடுக்க மறுத்ததால் சரண்யா, பிரபல ரவுடியான டேவிட் என்ற உதயகுமார், குமார் உள்பட 6 பேர் சேர்ந்து சுப்ரமணியனை கடத்தி சென்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் பழைய கார்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சின்னதிருப்பதியை சேர்ந்த சரண்யா என்பவரிடம் 20 சதவீத வட்டிக்கு சுப்ரமணியன் ரூ.24 லட்சம் கடன் வாங்கினார். பணம் வாங்கிய பிறகு 30 சதவீதம் வட்டி தரவேண்டும் என்று சரண்யா கூறி உள்ளார். இதில் அவர்களுக்கிடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரமணியன் அந்த கடனுக்கு ரூ.90 லட்சம் கட்டிய நிலையில், மேலும் ரூ.70 லட்சம் கேட்டு சரண்யா தரப்பினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர் கொடுக்க மறுத்ததால் சரண்யா, பிரபல ரவுடியான டேவிட் என்ற உதயகுமார், குமார் உள்பட 6 பேர் சேர்ந்து சுப்ரமணியனை கடத்தி சென்றனர். இது குறித்து சுப்ரமணியனின் மனைவி அன்பரசி (வயது 36) சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி சுப்ரமணியனை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் டேவிட் என்ற உதயகுமார் மற்றும் கன்னங்குறிச்சியை சேர்ந்த குமார், சரண்யா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் டேவிட் மற்றும் கன்னங்குறிச்சியை சேர்ந்த குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மீட்கப்பட்ட சுப்ரமணியன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இதில் டேவிட் மீது ஜெயில் வார்டன் மாதேஷ் கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை சேத்துப்பட்டு தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் ரவுடி எண்ணூர் மோகனை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு பகுதியில் வசித்து வருபவர் மூசா. தொழில் அதிபரான இவர் செம்மரக்கட்டைகளை வாங்கி வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவர் கடந்த மாதம் வீட்டில் இருந்த போது துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மூசாவின் மகன் பஷீரை தொடர்பு கொண்டு பேசிய கடத்தல் கும்பல் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியது. கடைசியாக ரூ.25 லட்சம் கொடுத்தால் மூசாவைவிட்டு விடுவதாக கூறிய கடத்தல் கும்பல் எழும்பூருக்கு வந்த போது சிக்கியது. இது தொடர்பாக பெண் உள்பட சிலர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

    கடத்தல் வழக்கில் யார்- யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றி போலீசார் மேலும் விசாரித்தனர். அப்போது எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடி மோகனுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

    எண்ணூரில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் மோகன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.`
    ×