என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் செல்வராஜ் எம்.எல்.ஏ.,பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் செல்வராஜ் எம்.எல்.ஏ.,பேசிய காட்சி.

    திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாநகர பொறுப்பாளர் டி. கே.டி. நாகராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளான கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி-பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

    வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்ப்பது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் உள்ள 50 மாநகராட்சி வார்டுகளிலும் ஒவ்வொரு வேட்பாளரையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    அதற்கு கடந்த 7 மாதங்களில் செய்த தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறியும் மக்களிடையே இரண்டற கலந்து அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளை களைந்து மத்திய மாவட்ட செயலாளர் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் 50 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற செய்ய கடுமையாக பாடுபட வேண்டும்.

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழாவை வருகிற 27-ந்தேதி அனைத்து அணி நிர்வாகிகளும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் ,அணி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×