என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • வாலிபர் ஜெயிலில் அடைப்பு
    • 30-க்கும் மேற்பட்ட கோழி தலைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே கோழி தலையில் வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவரை போலீசார் ைகது செய்து ெஜயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் கீழ்கொடுங்காலூர் சப்-இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் பைக்கில் வந்தவரை மடக்கி, பிடித்து விசாரித்தனர். அப்போது ரத்தம் சொட்ட, சொட்ட அவர் கொண்டு வந்த பையை பிரித்து பார்த்தனர்.

    அதில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் காட்டுப்பன்றி மற்றும் நாட்டு வெடிகுண்டு பொருத்திய 30-க்கும் மேற்பட்ட கோழி தலைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் போளூர், அல்லி நகர் பகுதியை சோந்த அஜித் (வயது 25) என்பதும், அவர் கோழி தலைகளுக்குள் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து அஜித்தை கைது செய்த போலீசார், வேட்டையாடப்பட்ட காட்டு பன்றியை ஆரணி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வேட்டை யாட பயன்படுத்திய பைக் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்ததோடு, அஜித்தை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • போக்சோ சட்டத்தில் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த பாஷா என்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை காஞ்சி ரோடு கிரிவல பாதையில் உள்ள ராணி அண்ணாதுரை நகரைச் சேர்ந்த பாஷா என்பவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே உள்ள மாற்றுத்திறனாளி இளம் பெண் மற்றும் அவரது பெரியம்மா ஆகியோருக்கு வீட்டுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுப்பது போன்ற உதவிகளை பாஷா செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பாட்ஷா மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் அவ்வப்போது ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி தகவல் அறிந்த நபர் ஒருவர் சமூக நலத்துறை உதவி எண் 1019 -க்கு தகவல் தெரிவித்தார்.

    இந்நிலையில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் அதிகாரிகள் மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர் சமூக நல துறை சார்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் பாஷாவை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைத்தனர்.

    • போதுமான பஸ் வசதி இல்லாததால் ஆத்திரம்
    • 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    கிரிவலம் வந்த பக்தர்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல பேருந்து இல்லாததால் பெங்களூரு தற்காலிக பேருந்து நிலையம் முன்பு சந்தைமேடு அருகே கிரிவல பக்தர்கள் சாலை மறியல்

    ஆனி மாத பௌர்ணமி நேற்று மாலை 7.46-க்கு தொடங்கி இன்று மாலை 5.46 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை பெங்களூர் திருச்சி சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    கிரிவலப் பாதை செங்கம் சாலை சந்தைமேடு அருகே பெங்களூரு தற்காலிக பேருந்து நிலையம் முன்பு தர்மபுரி சேலம் ஓசூர் போன்ற பகுதிகளுக்கு நான்கு மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இன்று அதிகாலை நீண்ட நேரமாக பஸ்சுக்கு காத்திருந்த பக்தர்கள் பறிதவித்தனர்.

    போக்குவரத்து கழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் சரிவர பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் சந்தைமேடு தற்காலிக பஸ் நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    • ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் மூனுகபட்டு முள்ளிபட்டு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    மேலும் கடந்த சில மாதங்களாக ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கைத்தறி பட்டு புடவை நெய்வதற்கு பதிலாக விசைதறி (பவர் லூம்) புடவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யபட்டு வருவதாக கூறப்படுகின்றன.

    ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆரணி கைத்தறி பட்டு நெசவாளர்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தலைவர் பரமாத்தமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆரணி சுற்றியுள்ள பட்டு கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர்.

    இதில் மத்திய மாநில அரசுகள் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி பட்டு நெய்யபட்டு கைத்தறி பட்டு என்று விற்பனை செய்யபட்டு வருகின்றன.

    விசைத்தறி பட்டு நெய்வதால் கைத்தறி பட்டு நெசவாளர்கள் உற்பத்தி யாளர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளன.

    கடந்த 3 மாதங்களில் கைத்தறி பட்டு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி செய்யபட்டு விசைதறியால் தேக்கமடைந்துள்ளன.

    ஆகையால் உடனடியாக மத்திய மாநில அரசுகள் விசைதறி நெய்தலை தடுத்து நிறுத்தி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் பரணி, பானுப்ரியன், வாசுதேவன், வீரபத்திரன், மற்றும் ஆரணி செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

    • லால் சலாம் திரைப்படம் வெற்றி பெற வேண்டி சென்றனர்
    • பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடியது

    திருவண்ணாமலை:

    பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

    அதன்படி இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் லால்சலாம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற வேண்டி கிரிவலம் சென்றனர்.

    • போலீசில் புகார்
    • ஏன் ஸ்மார்ட் கார்டில் என் பெயரை நீக்கி உள்ளீர்கள்? என்று கேட்டு முறையிட்டான்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூர் கிராமம், இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திக்கேயன், கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்காவனம். தம்பதியினருக்கு ஹரிகரன், கோபி என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் பூங்காவனம் கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். மனைவி இறந்ததிலிருந்து அவரது கணவர் கார்த்திகேயனும் காணாமல் போய்விட்டார். ஹரிகரன் மற்றும் கோபி ஆகியோர் பெற்றோரை இழந்து தனிமையில் வாடுகின்றனர். இந்த நிலையில் கோபி அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரேசன் கடைக்கு சென்றார்.

    அப்போது ரேசன் கார்டில் உன்னுடைய பெயர் இல்லை. கார்டில் பெயர் உள்ளவர்களை அழைத்து வருமாறு ரேசன் கடை விற்பனையாளர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு சிறுவன் கோபி அதிர்ச்சியடைந்தான்.

    கார்டில் பெயர் நீக்கப்பட்ட காரணத்தை தெரிந்து கொள்ள கோபி, போளுர் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றான். அங்குள்ள அதிகாரிகளிடம் ஸ்மார்ட் கார்டில் எனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக ரேசன் கடையில் கூறுகின்றனர்.

    ஏன் ஸ்மார்ட் கார்டில் என் பெயரை நீக்கி உள்ளீர்கள்? என்று கேட்டு முறையிட்டான்.

    அப்போது அதிகாரிகள், கோபி என்பவர் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதால், ரேசன் கார்டில் இருந்து பெயரை நீக்கம் செய்யபட்டதாக கூறினர்.

    போலி ஆவணம் தயாரித்து கோபி இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் பெற்றதும், இதன் மூலம் ரேசன் கார்டில் பெயர் நீக்கம் செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து சிறுவன் கோபி, உறவி னர்களின் உதவியுடன் திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் பாட்டி சின்ன பொண்ணு உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுகின்றனர்.
    • பவுர்ணமி இன்று மாலை 5.49 மணி வரை உள்ளது.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுகின்றனர். அண்ணாமலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.42 மணிக்கு தொடங்கியது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், குரு பவுர்ணமி என்பதாலும் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானது.

    சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்த காட்சி.

    சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்த காட்சி.


    பவுர்ணமி கிரிவலம் இரவில் தொடங்கியதால் மாலை வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மாலைக்கு மேல் அதிகரிக்க தொடங்கியது.

    நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    பவுர்ணமி இன்று (திங்கள்கிழமை) மாலை 5.49 மணி வரை உள்ளது. இதனால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில் :-

    தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் வரிசையில் நிற்கிறோம். வரிசையில் வரும் பக்தர்களுக்கு கோவிலில் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. வி.ஐ.பி.களுக்கு மட்டுமே கோவிலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது என்றனர்.

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி குரு பவுர்ணமி என அழைக்கப்படுகிறது. நேற்று இரவு 7.42 மணியளவில் பவுர்ணமி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், குரு பவுர்ணமி என்பதாலும் கிரிவலம் செல்ல காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. மேலும் சில பக்தர்கள் பகலில் கிரிவலம் சென்றனர். காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இதனால் பகலில் கிரிவலம் மற்றும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்ற பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பவுர்ணமி கிரிவலம் இரவில் தொடங்கியதால் மாலை வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மாலைக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவையும் தாண்டி விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) மாலை 5.49 மணி வரை உள்ளது. இதனால் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை வரை நடைபெறுகிறது.

    போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    குரு பவுர்ணமி கிரிவலத்தால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலத்துடன் காணப்படுகிறது.

    • பவுர்ணமி இரவில் தான் தொடங்குகிறது.
    • கோவில் அலுவலர்களிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    அதனால் பக்தர்கள் சிரமமின்றி விரைந்து தரிசனம் மேற்கொள்ளும் வகையில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்து பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள இந்த மாதம் முதல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

    இருப்பினும் நேற்று காலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் மற்றும் ராஜ கோபுரம் பகுதியில் சிறப்பு கட்டண தரிசனத்திற்கான கட்டணத்தொகை தலா ஒருவருக்கு வழக்கம் போல் ரூ.50 வசூலிக்கப்பட்டது. இதை கண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கோவில் அலுவலர்களிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அலுவலர்கள் தங்களுக்கு பவுர்ணமியின் போது தான் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பவுர்ணமி இரவில் தான் தொடங்குகிறது. அதுவரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றனர்.

    அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட்டு ஒரு நாளே ஆகும் நிலையில் கோவில் அலுவலர்கள் கட்டண தரிசனத்தை ரத்து செய்யாதது அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மதியம் 12 மணி முதல் சிறப்பு கட்டண தரிசனத்திற்கான கட்டணம் வசூலிக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரத்திலும் வைக்கப்பட்டு இருந்த கட்டண தரிசன வழிக்கான பேனர்கள், வரிசையில் தொங்கவிடப்பட்டு இருந்த பலகையும் அகற்றப்பட்டது.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில், அமைச்சர் உத்தரவிட்டும் கோவிலில் கட்டண தரிசனத்திற்காக ரூ.50 வசூலிக்கப்பட்டது. ஆனால் கட்டண தரிசனத்திற்கு டிக்கெட் எடுத்த நாங்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் நிற்கிறோம். வரிசையில் வரும் பக்தர்களுக்கு கோவிலில் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. வி.ஐ.பி.களுக்கு மட்டுமே கோவிலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றனர்.

    • ரூ.5.25 கோடி மதிப்பில் தொடங்கியது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே ஆற்காடு சாலையில் உள்ள கம்மவான்பேட்டை கிராமத்தில் மொட்டைமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை 2.26 கிமீ உள்ளது.

    இச்சாலையில் தார் சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதையடுத்து ரூ.5.25 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

    இதை ஆற்காடு எம்.எல்.ஏ ஜேஎல் ஈஸ்வரப்பன், தொடங்கி வைத்தார்.

    கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கௌரி, ராஜன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யா, ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன், கணியம்பாடி ஒன்றிய திமுக செயலாளர் கலைச்சந்தர், கம்மவான்பேட்டை ஊராட்சி தலைவர் கவிதாமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • சிறப்பு தீபாராதனை நடைபெற்றது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் ேகாவில் மற்றும் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நேற்று நந்திபகவானுக்கு சனிமகா பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நந்திபகவானுக்கு பல்வேறு வகையான பொருட்கள் மூலம் அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பிரதோஷ நாயகர் உட்பிரகார உலா நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோயில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்
    • மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடு நடைபெற்றது .

    இதையொட்டி சிவாச்சாரியார்கள் நந்தி பகவானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உற்சவர் சிலையை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×