search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணியில் ரூ.1000 கோடி கைத்தறி பட்டுப்புடவை தேக்கம்
    X

    கைத்தறி நெசவாளர்கள் கூட்டம் நடந்த காட்சி.

    ஆரணியில் ரூ.1000 கோடி கைத்தறி பட்டுப்புடவை தேக்கம்

    • ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் மூனுகபட்டு முள்ளிபட்டு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    மேலும் கடந்த சில மாதங்களாக ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கைத்தறி பட்டு புடவை நெய்வதற்கு பதிலாக விசைதறி (பவர் லூம்) புடவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யபட்டு வருவதாக கூறப்படுகின்றன.

    ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆரணி கைத்தறி பட்டு நெசவாளர்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தலைவர் பரமாத்தமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆரணி சுற்றியுள்ள பட்டு கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர்.

    இதில் மத்திய மாநில அரசுகள் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி பட்டு நெய்யபட்டு கைத்தறி பட்டு என்று விற்பனை செய்யபட்டு வருகின்றன.

    விசைத்தறி பட்டு நெய்வதால் கைத்தறி பட்டு நெசவாளர்கள் உற்பத்தி யாளர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளன.

    கடந்த 3 மாதங்களில் கைத்தறி பட்டு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி செய்யபட்டு விசைதறியால் தேக்கமடைந்துள்ளன.

    ஆகையால் உடனடியாக மத்திய மாநில அரசுகள் விசைதறி நெய்தலை தடுத்து நிறுத்தி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் பரணி, பானுப்ரியன், வாசுதேவன், வீரபத்திரன், மற்றும் ஆரணி செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×