என் மலர்
நீங்கள் தேடியது "Deletion of name in ration card"
- போலீசில் புகார்
- ஏன் ஸ்மார்ட் கார்டில் என் பெயரை நீக்கி உள்ளீர்கள்? என்று கேட்டு முறையிட்டான்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூர் கிராமம், இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திக்கேயன், கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்காவனம். தம்பதியினருக்கு ஹரிகரன், கோபி என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் பூங்காவனம் கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். மனைவி இறந்ததிலிருந்து அவரது கணவர் கார்த்திகேயனும் காணாமல் போய்விட்டார். ஹரிகரன் மற்றும் கோபி ஆகியோர் பெற்றோரை இழந்து தனிமையில் வாடுகின்றனர். இந்த நிலையில் கோபி அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரேசன் கடைக்கு சென்றார்.
அப்போது ரேசன் கார்டில் உன்னுடைய பெயர் இல்லை. கார்டில் பெயர் உள்ளவர்களை அழைத்து வருமாறு ரேசன் கடை விற்பனையாளர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு சிறுவன் கோபி அதிர்ச்சியடைந்தான்.
கார்டில் பெயர் நீக்கப்பட்ட காரணத்தை தெரிந்து கொள்ள கோபி, போளுர் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றான். அங்குள்ள அதிகாரிகளிடம் ஸ்மார்ட் கார்டில் எனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக ரேசன் கடையில் கூறுகின்றனர்.
ஏன் ஸ்மார்ட் கார்டில் என் பெயரை நீக்கி உள்ளீர்கள்? என்று கேட்டு முறையிட்டான்.
அப்போது அதிகாரிகள், கோபி என்பவர் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதால், ரேசன் கார்டில் இருந்து பெயரை நீக்கம் செய்யபட்டதாக கூறினர்.
போலி ஆவணம் தயாரித்து கோபி இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் பெற்றதும், இதன் மூலம் ரேசன் கார்டில் பெயர் நீக்கம் செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து சிறுவன் கோபி, உறவி னர்களின் உதவியுடன் திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் பாட்டி சின்ன பொண்ணு உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






