என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • தங்க கொடிமரத்தில் காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் தொடங்கும்
    • 10 நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் தனி சிறப்பிற்குரியது ஆனி பிரமோற்சவ விழா.

    தட்சணாயண புண்ணிய காலம் என அழைக்கப்படும் ஆனி பிரமோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி கோவிலின் 3-வது பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கின்றனர்.

    அப்போது அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாச லேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து விநாயகர் உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் பவனி வந்து காட்சியளிப்பார்கள்.

    ஆனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்ப ட்டுள்ளன.

    • எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு கிராம பஞ்சாயத்துகளில் துப்புரவு பணிக்காக மின்சார ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.

    புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்த இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    29 கிராம பஞ்சாயத்துகளுக்கு 37 மின்சார ஆட்டோக்கள் துப்புரவு பணிகளுக்காக வழங்கப்பட்டது.

    சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு மின்சார ஆட்டோக்களை வழங்கினார்.

    இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபு, நிர்மலா, ஒன்றிய கவுன்சிலர் பொன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 அம்ச கோரிக்கை களை விளக்கியும் பேசினர்
    • பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-ம், எருமைப்பாலுக்கு ரூ.75-ம் வழங்க வலியுறுத்தினர்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் சார் பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கீழ்பென்னாத்தூரில் உள்ள மார்க் கெட்கமிட்டி எதிரில்தொடர் காத்திருப்புபோராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    மாவட்ட அவை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழு மலை, மாவட்ட மகளிரணிசெயலாளர் சாந்தா, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன், கொள்கைபரப்பு செயலாளர் முனிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் நடராஜன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணிதுணை செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டுபோராட்டம் குறித்தும், 10 அம்ச கோரிக்கை களை விளக்கியும் பேசினார்.

    இதில் தமிழக அரசு நெல் குவிண் டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மணிலா குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ.5ஆயிரமும், உளுந்து குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிர மும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மர வள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரமும், பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-ம், எருமைப்பாலுக்கு ரூ.75-ம் வழங்க வேண்டும்.

    தமிழக அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட் டுமே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • 25 பேர் பயணடைந்தனர்
    • கண் பரிசோதனை செய்யப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்தவாசி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவியருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

    இந்த பள்ளியில் சில தினங்களுக்கு முன் வழூர் வட்டார கண் மருத்துவக் குழுவினர் மாணவிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதில் கண் குறைபாடு உள்ள 25 மாணவியருக்கு இந்த கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை பொ.பத்மாவதி தலைமை தாங்கினார். நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காளிச்செல்வம் மாணவியருக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு வைத்தனர்
    • போலீஸ் பாதுகாப்புடன் நடவடிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூரில் உள்ள புறம்போக்கு இடத்தில் காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்யப்பட்டிருந்தது.

    இங்கு அருந்ததியர் இன மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டு அவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

    இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை விநாயகர் சிலையை அனுமதியின்றி வைத்திருந்தனர்.

    இதனை அவர்களே அகற்றும்படி தெரிவித்தும் மேற்படி இடத்தில் பிள்ளையார் சிலையை அகற்றவில்லை.

    இதனையடுத்து ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில் அளவீடு செய்யப்பட்டதில் அந்த இடம் தெரு என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து வருவாய்த்துறையினர் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி நிர்வா கத்தினருடன் இணைந்து விநாயகர் சிலையை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • டீ குடிக்க நடந்து சென்று கொண்டிருந்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    தூசி:

    பீகார் மாநிலம் தானாசிகர் பாராஹாத்தாலுகா நாராயணபூர் அருகே உள்ள பக்பூல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு முர்மு (வயது 25). இவரது மனைவிஷம்மி (23). இருவரும் சிப்காட்டில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த னர். இதற்காக அருகே உள்ள சோழவ ரம் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை அஞ்சு முர்மு அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.

    • டிராக்டருடன் தப்பியவருக்கு வலைவீச்சு
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி மேற்பார்வையில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் கள் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் விண்ண மங்கலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவரின் டிராக்டரில் ஆற்று மணல் கடத்தப்பட்டு வந் துள்ளது. அதிகாரிகளை பார்த்ததும் மணல் ஏற்றிவந்தடிரெய் லரை கழற்றிவிட்டு டிராக்டரை ஜெகன் ஓட்டிச் சென்று விட்டார்.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் தகவல் அளித்தனர். அதன்பேரில் டிரெய்லரை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இது தொடர்பாக தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபு தீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • டாஸ்மாக் கடை முன் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    ஆரணி:

    ஆரணி கொசப்பா ளையம் பெரிய சாயக்கார தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 50). சலவை தொழிலாளி. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சுரேஷ்குமார், ஜெயக்குமார் என்ற 2 மகன்களும் உள்ளார்.

    பிரகாஷ் மது அருந்தி வருவ தால் அவரை விட்டு மனைவி சரஸ்வதி, மகன் ஜெயக்குமார் சென்னையில் வசித்து வரு கின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு ஆரணி காந்தி ரோட் டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் மதுபானம் வாங்க சென்றதாக கூறப்படு கிறது. அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

    அவரை மகன் சுரேஷ்கு மார் தேடிச்சென்றபோது டாஸ்மாக் கடை முன் பிரகாஷ் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன், உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தார்.பின்னர் பிரேத பரிசோத னைக்காக பிரகாஷ் உடலை திருவண்ணாமலை மருத்து வக் கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    உடலில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவரை யாரும் கொலை செய்தனரா? போதையில் தடுமாறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் ஆரணி பஜார் பகுதியில் பழவியாபாரம் செய்து வரும் கனகம்பட்டு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி(வயது 37) என்பவர் பிரகாசை கொலை செய்தது தெரியவந்தது.

    மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது.

    போலீசார் முனியாண்டியை கைது செய்தனர். அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • சிறப்பு தீபாராதனை நடைபெற்றது
    • பவுர்ணமி ரத உற்சவம் நடைபெற்றது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பவுர்ணமி ரத உற்சவம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேசுவரர் ரத உற்சவம் நடைபெற்றது.

    இதில் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் சாமிக்கு இரண்டு மாலைகளை அணிவித்து, அதில் ஒரு மாலையை தங்கள் கழுத்தில் போட்டுக் கொண்டு திருமணம் நடைபெற வேண்டி வணங்கினர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
    • வி.ஐ.பி.கள் வழக்கம் போல் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணையை முன்னிட்டு 2-வது நாளாக நேற்று ஆந்திரா, தெலுங்கானா மாநில பக்தர்கள் குவிந்தனர்.

    திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள மகா தீபம் ஏற்றப்படும் அண்ணா மலையை திரலானா பக்தர்கள் வலம் வந்தனர்.

    ஆனி மாத பவுர்ணமி நாளை குரு பூர்ணிமா என கூறப்படுவதால் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தமிழக பக்தர்களுக்கு இணையாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா பக்தர்கள் குவிந்தனர்.

    விடுமுறை நாளான நேற்று முன்தினம் தமிழக பக்தர்கள் வந்து சென்ற நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பக்தர்கள் 2-வது நாளாக திருவண்ணாமலைக்கு வருகை தந்தும் வந்தவர்கள் முகாமிட்டும் உள்ளனர்.

    திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதை முழுவதும் தெலுங்கு மொழி பேசும் பக்தர்கள் நிறைந்து காணப்பட்டனர்.

    இதேபோல கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் கணிசமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா என 4 மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திருவண்ணா மலை அண்ணாமலையார் கோவிலில் 2-வது நகலாக குவிந்தனர்.

    தேரடி வீதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இவர்களில் ஆந்திரா, தெலுங்கானா மாநில பக்தர்கள் அதிகம் பொது தரிசன பாதையில் தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

    வி.ஐ.பி.கள் வழக்கம் போல் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    • சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
    • வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    மழைக்கு முன்னதாக பலத்த காற்று வீசியதில் புழுதி கிளம்பி, பொதுமக்கள் கண்ணில் விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான சாலை மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    அதன்படி கண்ணமங்கலம் ஏ.ஜி.எம். தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள் தண்ணீரை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். திடீரென பெய்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
    • விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100

    திருவண்ணாமலை:

    இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப் படுத்த, 2023-24-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், இயற்கை வேளாண் மையில் சிறந்து விளங்கும்.

    விவசாயிகளுக்கு 'நம்மாழ்வார் விருது' வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.

    திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் ஹர குமார் கூறியதாவது:-

    நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், 'அக்ரிஸ் நெட்' இணையதளத்தில் வரும் நவம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும்.

    விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100 ஆகும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும்.

    குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    இதில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினத்தில் முதல் அமைச்சரால் வழங்கப்படும்.

    முதல் பரிசு ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், 2-ம் பரிசு ரூ.1.50 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், 3-ம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புடைய பதக்கம் வழங்கப்படும். நம்மாழ்வார் விருதுக்கான விவரம் மற்றும் விண்ணபிக்கும் வழிமுறைகளை, வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி தெரிந்து கொள்ளலாம்" என தெரிவித்தார்.

    ×