என் மலர்
நீங்கள் தேடியது "பலத்த காற்று வீசியதில் புழுதி கிளம்பியது"
- சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
- வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
மழைக்கு முன்னதாக பலத்த காற்று வீசியதில் புழுதி கிளம்பி, பொதுமக்கள் கண்ணில் விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான சாலை மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
அதன்படி கண்ணமங்கலம் ஏ.ஜி.எம். தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள் தண்ணீரை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். திடீரென பெய்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






