என் மலர்
நீங்கள் தேடியது "Free eye glasses"
- 25 பேர் பயணடைந்தனர்
- கண் பரிசோதனை செய்யப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்தவாசி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவியருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
இந்த பள்ளியில் சில தினங்களுக்கு முன் வழூர் வட்டார கண் மருத்துவக் குழுவினர் மாணவிகளுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் கண் குறைபாடு உள்ள 25 மாணவியருக்கு இந்த கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை பொ.பத்மாவதி தலைமை தாங்கினார். நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காளிச்செல்வம் மாணவியருக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.






