என் மலர்
திருவண்ணாமலை
- மினி டெம்போ வேன் நிற்காமல் சென்று விட்டது
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள சின்னஅய்யம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் முனுசாமி(வயது68) விவசாயி. இவருக்கு ரோஜா என்ற மனைவியும்,2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக தனது விவசாயநிலத்திற்கு சென்றார். வேலூர்-திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி மினி டெம்போ வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேன் திடிரென விவசாயி மற்றும் மாடு மீது மோதியது.
இந்த விபத்தில் விவசாயி முனுசாமி சாலையி லிருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பசுமாடு சாலையிலேயே அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் சிறிது நேரம் கழித்து உயிரிழந்தது.
விபத்து ஏற்படுத்திய மினி டெம்போ வேன் நிற்காமல் சென்று விட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா க்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கண்ணமங்கலம் அரசு பள்ளியில் நடந்தது
- பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கி கூறினர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தொகுப்பு கருத்தாய்வு பயிற்சியை மேற்கு ஆரணி வட்டார கல்வி அலுவலர் அருணகிரி தொடங்கி வைத்தார்.
இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் கோவர்த்தனன், ராமச்சந்திரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
இந்த முகாமில் ஒன்றாம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 33 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பள்ளி சுகாதாரம், குழந்தைகள் நலம், மாற்று திறனாளி மாணவ மாணவிகளை மதிப்பீடு செய்து குறித்து சிறப்பு முகாம் நடத்துவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.
- மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தொடங்கி வைத்தார்
- 30 ஆண்டுகளுக்கு பின்பு இயக்கப்படுகிறது
ஆரணி:
ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்பு ஆரணி-படவேடு வழி தடத்தில் செல்லும் பஸ்கள் நின்று செல்ல தொடக்க விழா நடைபெற்றது.
மேலும் தற்போது கோரிக்கையை ஏற்று போக்குவரத்து துறை சார்பில் 1பி அரசு பஸ் புதிய வழித்தடத்தை தொடங்கும் நிகழ்வு மாவட்ட தொழில்நுட்ப துணை மேலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் துரை.மாமது, மோகன், மேற்கு ஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட தொழிலாளி அணி துணை அமைப்பாளர் பிடிசி உதயசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் குப்பு சங்கர், நிர்வாகிகள் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- 10-ம் வகுப்பு படித்து வந்தார்
- போலீசார் தேடி வருகின்றனர்
வந்தவாசி:
வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து இவரது தந்தை வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.
- வினாடிக்கு 210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
- ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 210 கனஅடி நீர்வரத்து உள்ளது.
தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதை அடுத்து தென்பெண்ணை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 108.20 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 7,321 மில்லியன் கனஅடி உள்ள அணையின் கொள்ளளவு மழையின் காரணமாக தற்போது 5,099 அடியாக உள்ளது.
தென்பெண்ணை யாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறையில் இருந்து சாத்தனூர் அணை வரை உள்ள ஆற்றங்கரையோர கிராம மக்கள், எச்சரிக்கை யுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தென்பெண்ணை யாற்றில் நீர்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றைக் கடந்து அழைத்து செல்லவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிக்கை
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட் டுமே பயன்படுத்த வேண்டும்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் இன்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் சார் பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கீழ்பென் னாத்தூரில் உள்ள மார்க் கெட்கமிட்டி எதிரில்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட அவை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழு மலை, மாவட்ட மகளிரணிசெயலாளர் சாந்தா, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன், கொள்கைபரப்பு செயலாளர் முனிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் நடராஜன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணிதுணை செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டுபோராட்டம் குறித் தும், 10 அம்ச கோரிக்கை களை விளக்கியும் பேசினார்.
இதில் தமிழக அரசு நெல் குவிண் டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மணிலா குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும், உளுந்து குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரமும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மர வள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரமும், பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-ம், எருமைப்பாலுக்கு ரூ.75-ம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட் டுமே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்றும் 4-வது நாளாக விவசாயிகள் கையில் கரும்பு ஏந்தி காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- மூன்றாம் கால பூஜை நடைபெற்றது
- பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதனை முன்னிட்டு ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து
பின்னர் சிவாச்சாரியா ர்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 2500 ஆண்டுகளுக்கு முந்தையது
- 3 அடி நீளமும், 2 அடி அகலமும், ஒரு அடி உயரமும் கொண்டவையாக உள்ளன
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ்நமண்டியில் நடைபெற்று வரும் தொல்லியல் துறை அகழாய்வில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈமப் பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கீழ்நமண்டி பகுதியில் முதல் கட்ட அகழாய்வு செய்யும் பணிகள் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கியது. அகழாய்வு மைய இயக்குநர் ஜி.விக்டர் ஞானராஜ், மைய பொறுப்பாளர் எம்.சுரேஷ் ஆகியோர் தலைமையில் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் இந்த அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை 11 கல்வட்டங்களை குழிதோண்டி அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 11 கல்வட்டங்களிலும் தலா ஒன்று முதல் 3 ஈமப் பேழைகளும், சிவப்பு மற்றும் கருப்பு சிவப்பு பானைகளும் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஈமப் பேழைகள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
சுடுமண்ணால் 12 கால்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஈமப் பேழைகள் தலா சுமார் 3 அடி நீளமும், 2 அடி அகலமும், ஒரு அடி உயரமும் கொண்டவையாக உள்ளன.
இதில் சில ஈமப் பேழைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த ஈமப் பேழைகள் மற்றும் பானைகளை வெளியே எடுத்து ஆய்வு செய்த பின்னர்தான் இதில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் விவரம் தெரியவரும்.
மேலும் இந்த அகழாய்வின் போது கிடைத்த பொருட்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று முதல் 10 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள், சாமி வீதி உலா நடைபெறும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறுகிறது.
சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.
ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. இதனையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து முதலில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூரட்டாதி நட்சத்திரம் மிதுன லக்னத்தில் இன்று காலை 6 மணிக்கு ஆனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது.

ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்த காட்சி.
அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் திருக்கோவில் இணை ஆணையர் ஜோதி அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் ராஜாராம், கோமதி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இதைத்தொடர்ந்து விநாயகர் உண்ணா மலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மனும் அலங்கார ரூபத்தில் பவனி வந்து காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆனி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் சாமி வீதி உலா நடைபெறும் என தெரிவித்தனர்.
- லாரியின் பின்பக்கத்தில் கார் மோதியது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
செங்கம் தாலுகா, காயம்பட்டு சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் தனசெழியன் மகன் மகேஷ்வரன் (வயது 29). இவர் செங்கத்தில் நகை அடகுக்கடை வைத்திருந்தார். இவர் கடந்த 4-ந் தேதி இரவு அவரது நண்பரின் காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்து விட்டு பின்னர் மீண்டும் வீடு திரும்பினார்.
அவர் காரில் செங்கம் சாலை அஸ்வநாதசுரணை அருகில் சென்று கொண்டிருந் தார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் மகேஷ்வரன் வந்த கார் லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த மகேஷ்வரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் விவகாரம்
- 3 பேருக்கு வலைவீச்சு
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது தம்பி ஏழுமலை (வயது 55). இருவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுப்பிரமணி வீட்டுக்கு சென்ற ஏழுமலை மற்றும் அவரது மகன்கள் ரஞ்சித், சூர்யா, கணபதி ஆகியோர் வீட்டுமனை விவகாரம் தொடர்பாக அவரிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது சுப்பிரமணிக்கு ஆதரவாக வந்த அவரது மருமகன் அருண்குமாரை (38) கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் சுப்பிரமணி, அவரது மகன் கருணாகரனையும் கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதில் படுகாயமடைந்த அருண்குமார் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் கொடுங்காலூர் போலீசார் ஏழுமலை, ரஞ்சித், சூர்யா, கணபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- அன்னதானம் வழங்கப்பட்டது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதிய சாலை அங்காளம்மன் கோவிலில் பிள்ளையார் கோவில் மற்றும் நவக்கிரக சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட புதிய விநாயகர் சிலை மற்றும் நவக்கிரக சிலைகள் மீது புனிதநீர் புறப்பாடுடன், பிள்ளையார், நவக்கிரக சிலைகளுக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சார்பில் பர்வதராஜகுல மரபினர் செய்திருந்தனர்.






