தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது

வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் விவகாரம்3 பேருக்கு வலைவீச்சு
தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
Published on

வந்தவாசி:

வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது தம்பி ஏழுமலை (வயது 55). இருவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுப்பிரமணி வீட்டுக்கு சென்ற ஏழுமலை மற்றும் அவரது மகன்கள் ரஞ்சித், சூர்யா, கணபதி ஆகியோர் வீட்டுமனை விவகாரம் தொடர்பாக அவரிடம் தகராறு செய்துள்ளனர்.

அப்போது சுப்பிரமணிக்கு ஆதரவாக வந்த அவரது மருமகன் அருண்குமாரை (38) கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் சுப்பிரமணி, அவரது மகன் கருணாகரனையும் கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதில் படுகாயமடைந்த அருண்குமார் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் கொடுங்காலூர் போலீசார் ஏழுமலை, ரஞ்சித், சூர்யா, கணபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com