என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "33 teachers participated"

    • கண்ணமங்கலம் அரசு பள்ளியில் நடந்தது
    • பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கி கூறினர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தொகுப்பு கருத்தாய்வு பயிற்சியை மேற்கு ஆரணி வட்டார கல்வி அலுவலர் அருணகிரி தொடங்கி வைத்தார்.

    இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் கோவர்த்தனன், ராமச்சந்திரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    இந்த முகாமில் ஒன்றாம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 33 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பள்ளி சுகாதாரம், குழந்தைகள் நலம், மாற்று திறனாளி மாணவ மாணவிகளை மதிப்பீடு செய்து குறித்து சிறப்பு முகாம் நடத்துவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.

    ×