என் மலர்
திருவண்ணாமலை
- 5 பவுன் நகை திருட்டு
- போலீசார் விசாரணை
வாணாபுரம்:
வாணாபுரம் அடுத்த தச்சம்பட்டு அருகே உள்ள பாவப்பட்டு நடுத்தெரு முரு கன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 39). கூலி தொழி லாளியான இவர் கேரளாவில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகி றார்.
சம்பவத்தன்று பாவப்பட் டில் உள்ள இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அவரது உறவினர்கள் சிவாவிற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கேரளாவிலி ருந்து புறப்பட்டு வந்த சிவா வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.
அதில் இருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்து தச்சம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
புதுச்சேரியை சேர்ந்தவர் அனந்தபாஸ்கர் (வயது 22). இவரது நண்பர் ஒருவர் ஜமுனாமரத்தூரில் உள்ளார்.
இந்த நிலையில் ஜமுனாமரத்தூருக்கு வந்த அனந்த பாஸ்கர், நண்பருடன் இணைந்து கஞ்சா வாங்கிக்கொண்டு பைக்கில் புதுச்சேரி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஜமுனாமரத்தூர் கோவிலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் இருவ ரையும் போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் அனந்த பாஸ்கர் போலீசில் சிக்கினார். அவருடன் வந்த அவரது நண்பர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அனந்த பாஸ்கரை கைது செய்து அவரிடம் இருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப் பட்டது. தொடர்ந்து இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- பெரணமல்லூரில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் யானைக்கால் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம், மற்றும் மருத்துவ உபகரணங்கள், வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் மகாலட்சுமி, தலைமை தாங்கினார். அனைவரையும் சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், பெரணமல்லூர், பேரூராட்சி மன்ற தலைவர் வேணிஏழுமலை, ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சுகாதார ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கை, கால்களை, சுத்தம் செய்யும் முறைகளை செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்.
- பெரணமல்லூரில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர், வட்டார வள மையம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட, தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடந்தது. முகாமை வட்டார வள மேற்பார்வை யாளர் ராஜா, தொடங்கி வைத்தார்.
கருத்தாளர்களாக மருத்துவர், வழக்கறிஞர், திறன் மேம்பாட்டு துறை அலுவலர், தொழில் முனைவோர், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வில் திறன் குறித்து பயிற்சி அளித்தனர்.
இதில் பெரணமல்லூர் வட்டாரத்தில் உள்ள 64 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு வருகிற மார்ச் 19ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார வளாக மையத்தில் அரசு மேல்நிலை நடுநிலை உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 9-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேன் சிட்டு, இதழ் மூலம் வினாடி, வினா, போட்டிகள் நடைபெற்றது.
இதில் பெரணமல்லூர் வட்டாரத்தில் உள்ள 18 பள்ளியிலிருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு
- 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே.நகரில் உள்ள கே.பி.கே.நகரை சேர்ந்த அதிமுக பிரமுகரும் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க மாவட்ட துணை தலைவருமான ஆனந்தன் ஜெயா தம்பதியினருக்கு பூர்ணிமா என்ற மகளும் வேல்முருகன் என்ற மகனும் உள்ளனர்.
மேலும் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் ஆனந்தன் தனது மனைவியுடன் சென்னைக்கு மீனவர் சங்க கூட்டத்திற்கு செல்வதற்கும் தனது பிள்ளைகள் சென்னையில் படித்து வருவதால் இருவரையும் பார்க்கவும் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்தும் அதில் இருந்த சுமார் 25 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து நேற்று மதியம் தனது வீட்டிற்கு ஆனந்தன் குடும்பத்தினர் வந்தடார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்தது இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
மேலும் கொள்ளை சம்பவம் குறித்து ஆனந்தன் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்னர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கோகுல், எஸ்.ஐ. சுந்தரேசன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
ஆரணி டவுன் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னையில் பதுங்கி இருந்த நிஜாமுதீன் என்பவரை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
- திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி 4 ஏடிஎம்களை கியாஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ரூ.73 லட்சத்தை மர்மகும்பல் கொள்ளையடித்தது.
இதுதொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கர்நாடகம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தப்பிய கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையினர் முகாமிட்டனர்.
இதில், கொள்ளை கும்பலின் மூளையாக செயல்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப்(வயது 35), ஆஜாத்(37) ஆகிய 2 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் கர்நாடக மாநிலம் கோலாரில்(கேஜிஎப்), ஒரு லாட்ஜில் கொள்ைள கும்பல் தங்கியிருந்து கொள்ளைக்கு திட்டமிடவும், பண பறிமாற்றம் செய்யவும் உதவியாக இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குர்தீஷ் பாஷா(43), அசாம் மாநிலம் லாலாப்பூரை சேர்ந்த அஷ்ரப் உசேன்(26) ஆகியோரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் ரூ. 70 லட்சம் பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து தகவலை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தனிப்படையினர் அரியானா மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு பணம் பதுக்கி உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னையில் பதுங்கி இருந்த நிஜாமுதீன் என்பவரை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
அவரை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள மேல் கொளத்தூர் கிராமம், பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்தி (வயது 48).
இவர் வயிற்று வலி காரணமாக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் நேற்று முன் தினம் வயிற்று வலி அதிகமாகவே அரளி விதை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு செய்யாறு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது சம்பந்தமாக ஜெயகாந்தியின் மகன் கருணாகரன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜி மனைவி புவனேஸ்வரி (வயது 51).
இவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வீட்டிற்குள் தூக்கில் தொங்கினார் புவனேஸ்வரி மகன் வெங்கடேசன் உடனடியாக அவரை மீட்டு செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு புவனேஸ்வரி இறந்து விட்டார். இது சம்பந்தமாக புவனேஸ்வரி மகன் ரவி செய்யாறு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- ஆசிரியர், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.1 கோடி 84 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ரூ.1 கோடி 84 லட்சம் கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் சண்முகம்/ ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனியப்பன், பாரதிதாசன், சாந்தமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காப்பு காட்டில் மரம் வெட்டிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெட்டியா ந்தொழுவம் கிராமத்தில் அடந்த காப்பு காடு உள்ளது.
இந்த காப்பு காட்டில் தைலம் மரங்கள் வெட்ட கரூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித மில் என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.
மேலும் கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அய்யசாமி உள்ளிட்ட 25 நபர்கள் ஆரணி அடுத்த வெட்டியாந்தொழுவம் காப்பு காட்டில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் தைலம் மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று வெட்டியாந்தொழுவம் காப்புகாட்டில் தைலம் மரங்களை வெட்டிய போது எதிர்பாரதவிதமாக மரம் அய்யசாமி மீது மரம் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அய்யாசாமியை உடன் இருந்த கூலி தொழிலாளிகள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே அய்யசாமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலிறந்து வந்த ஆரணி தாலுக்கா இன்ஸ்பெக்டர் புகழ் வழக்கு பதிந்து சக தொழிலாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஆரணி அருகே மரம் வெட்டிய போது தொழிலாளி மீது விழுந்ததில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இறந்த அய்யசாமிக்கு செல்வியம்மாள் என்ற மனைவியும் வெங்கடேஷ், பிரகாஷ் என்ற 2 மகன்களும் கவிதா என்ற மகளும் உள்ளனர்.
- கலெக்டர் முருகேஷ் வழங்கினார்
- 15-ந் தேதி வரை நடைபெறுகிறது
திருவண்ணாமலை:
தண்டராம்பட்டு அருகே ஆத்திப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்வலசை, கீழ்வலசை, மேல்முத்தானூர், அக்கரைப்பட்டி, செம்பட்டி ஆகிய மலை கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் ஆத்திப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்தது.
இதற்காக அப்பகுதி பொதுமக்கள் 670 மனுக்கள் அளித்திருந்தனர். அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து 581 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மனுநீதி நாள் முகாமுக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி 581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஒரு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர் சுகாதாரம் போக்குவரத்து வசதி சரியாக இருந்தால் அந்த கிராமம் முன்னேறி விடும். கிராமப் பகுதியில் உள்ள குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்தால் அவர்களுடைய எதிர்காலம் நல்ல முறையில் இருக்கும்.
குழந்தைகள் நல்ல முறையில் இருப்பதற்காகத்தான் தமிழக முதல்-அமைச்சர் காலை சிற்றுண்டி என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். கிராம பகுதியில் உள்ள குழந்தைகளை பட்டப்படிப்பு வரை படிக்கவைக்க வேண்டும். குழந்தை திருமணத்தால் எதிர்காலத்தில் கணவன் மனைவி இருவரும் கூலித் தொழிலாளியாகவே இருக்கின்றனர்.
நல்ல முறையில் படித்தால் எதிர்காலத்தில் சுய தொழில் தொடங்க முடியும். வாழ்க்கையில் முன்னேற முடியும். திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தால் கடந்த ஆண்டு 15 பெண்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் கிராமப் பகுதியில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பெண் குழந்தைகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தற்போது கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் கிராமப் பகுதியில் உள்ள தகுதியானவர்கள் அரசு மூலம் வழங்கியிருக்கக்கூடிய அடையாள அட்டையை வைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் இந்த பதிவு வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- உடனடியாக செலுத்த ஆணையாளர் வேண்டுகோள்
- குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை
தூசி:
செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்ப தாவது:-
திருவத்திபுரம் நகராட்சியில் சொத்து வரி, காலி மனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை என மொத்தம் ரூ.2 கோடியே 66 லட்சத்து 30 ஆயிரம் நிலுவை பாக்கியாக உள்ளது. நிலுவை பாக்கி அதிகமாக வைத்துள்ள காரணத்தினால் பொது மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளது.
பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தினால் வசதியாக இருக்கும். இதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் திருவத்திபுரம் நகராட்சி அலுவலர்கள் அனைத்து வார்டுகளில் தீவிர வசூல் பணி யினை மேற்கொள்ள உள்ளனர்.
வரிகளை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைத்து வரிக ளையும் உடனே செலுத்தி நகராட்சிக்கு உதவிட வேண்டும். இவ்வாறு'அதில் கூறப்பட்டுள்ளது.






