search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்
    X

    பெரணமல்லூர் வட்டார வளமைய வளாகத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டதன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்த போது எடுத்த படம்

    புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

    • பெரணமல்லூரில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர், வட்டார வள மையம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட, தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடந்தது. முகாமை வட்டார வள மேற்பார்வை யாளர் ராஜா, தொடங்கி வைத்தார்.

    கருத்தாளர்களாக மருத்துவர், வழக்கறிஞர், திறன் மேம்பாட்டு துறை அலுவலர், தொழில் முனைவோர், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வில் திறன் குறித்து பயிற்சி அளித்தனர்.

    இதில் பெரணமல்லூர் வட்டாரத்தில் உள்ள 64 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு வருகிற மார்ச் 19ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார வளாக மையத்தில் அரசு மேல்நிலை நடுநிலை உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 9-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேன் சிட்டு, இதழ் மூலம் வினாடி, வினா, போட்டிகள் நடைபெற்றது.

    இதில் பெரணமல்லூர் வட்டாரத்தில் உள்ள 18 பள்ளியிலிருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×