என் மலர்
திருவண்ணாமலை
- விஷத்தை சேகரித்து தொழில் தொடங்கு வதற்கான ஏற்பாடு
- கலெக்டர் தொடங்கி ைவத்தார்
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியம் கெங்காபுரம், கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாம்பு பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு பாம்பு பிடிப்போர் வாழ்வாதார தொழிற் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர். பின்னர் மாவட்ட தொழில் மையத்தில் பதிவு செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மேம்பாட்டு நிதியிலிருந்து 31 லட்சம் கடன் பெற்று பாம்புகளை பிடித்து விஷத்தை சேகரித்து தொழில் தொடங்கு வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
தமிழ்நாடு புதுமை திட்டத்தின் மூலம் 32 லட்சம் கடன் உதவி பெற்று பாம்பு பண்ணை, மற்றும் ஆய்வகம், தொழிற்சங்க கட்டிடம், ஆகியவற்றை அமைத்தனர். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் முருகேஷ், கலந்துகொண்டு தொழிற்சங்க கட்டிடம், பாம்பு பண்ணை, ஆய்வகம், ஆகியவற்றை திறந்து வைத்து. பாம்பு பிடிப்பதற்கான உபகரணங்கள், மற்றும் லைசென்ஸ், ஆகியவற்றை வழங்கினார்.
- கூடுதல் கலெக்டர் உத்தரவு
- வீடுகள் கட்டி முடிக்காமலேயே முழு தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டமடவு ஊராட்சியில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கூடுதல் கலெக்டர் ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ள திடீரென சென்றார். அப்போது பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 வீடுகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டதும் சில வீடுகளுக்கு கட்டி முடிக்காமலேயே முழு தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கட்டமடுவு ஊராட்சி செயலாளர் முருகன், பணி மேற்பார்வையாளர் வாசு உள்ளிட்டவர்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்
- எராளனோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை மாவட்ட துணை இயக்குனர் கண்ணகி தலைமையில் பயனாளிகளுக்கு வேளாண் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் செங்கம் வேளாண்மை அலுவலர் பிரதிபா முன்னிலை வகித்தார்.
உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அனைத்து விவசாயக் பண்ணைக்கருவிகள் தார்பாலின், ஜிப்சம், ஜிங்சல்பேட், விசைத்தெளிப்பான் ஆகியவை மானிய விலையில் விவசாய பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கண்ணகி தெரிவித்தார்.
அதேபோல நெல் அறுவடைக்கு பின்பு உளுந்து பயிரிட தேவையான உளுந்து விதைகள் 50 சதவீதம் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செங்கம் வட்ட வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் கண்ணகி கேட்டுக் கொண்டார்.
இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கர், சரவணன், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என உறவினர்கள் எழுதி கொடுத்தனர்
ஆரணி:
ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் கடந்த 1-ந் தேதி கிருத்திகை பெருவிழாவையொட்டி நடைபெற்ற காளை விடும் விழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
காளைவிடும் விழா நடந்தபோது பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டை அருகே இருந்த ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப் பையன் (வயது 65) என்பவரை சீறிப்பாய்ந்த காளை மிதித்து சென்றது. இதில் சின்னப் பையன் படுகாயம் அடைந்தார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் முதியவரை மீட்டு 108 அவசர ஆம்புலன்சில் உதவியாளர்கள் மருத்துவ சிகிச்சைகள் வழங்கினர். மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவம னைக்கு அவரை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னப்பையன் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என போலீஸ் நிலையத்தில் சின்னப்பையனின் உறவினர்கள் எழுதி கொடுத்துவிட்டு உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
- வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
- பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த அறிவுறுரை
செங்கம்:
செங்கம் பேரூராட்சிக்கு சொந்தமான வணிகவரி கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
செங்கம் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் கடை வைத்திருப்போர் பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் எனவும் வாடகை பாக்கி உள்ளவர்கள் முன்கூட்டியே வாடகை செலுத்திட அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல செங்கம் பகுதியில் வீட்டு வரி, குடிநீர் வழி உட்பட வரி இனங்கள் செலுத்தாதவர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் என பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பேரூராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் நேற்று துண்டிக்கப்பட்டது.
பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் வாடகை செலுத்தாத 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
- ஆஸ்பத்திரியில் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல்
- கால்நடைகளுடன் ஊர்வலமாக வந்தனர்
வந்தவாசி:
வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த கால்நடை மருத்துவ மனையில் மருத்துவர்கள் மருத்துவ உதவியாளர், கால்நடைக்கு ஊசி போடும் தகுந்த பயிற்றுநர்கள் 6 மாத காலமாக இல்லாததால் கால்நடைகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றன.
மேலும் மாடுகள் கோமாரி மற்றும் கழிச்சல் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
வந்தவாசி கால்நடை மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள், உபகரணங்கள் ,பணியாளர்கள் இல்லாத காரணத்தால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை கண்டித்து மாடுகள் மற்றும் கோழிகளை வைத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து வந்தவாசி தாசில்தார் அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்டோர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கால்நடை மருத்துவர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தாசில்தார் ராஜேந்திரனிடம் மனு கொடுத்தனர். இதனால் தாலுகா அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கலெக்டர் எச்சரிக்கை
- முதியோர் இல்லத்தில் சேர்க்க உத்தரவு
ஆரணி:
திருவண்ணாமலை ஆரணி அருகே மருசூர் கிராமத்தில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி முனியம்மாள் என்பவர் ஆதரவின்றி தங்கும் இடம் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
மருசூர் ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ்குமார் துணைதலைவர் ரமேஷ் உள்ளிட்ட மருசூர் ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான பாழடைந்த தொலைக்காட்சி அறையில் மூதாட்டியை தங்க வைத்துள்ளார்.
ஊராட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சி அறை பாழடைந்து மின்சாரம் வசதியின்றி சிதலமடைந்து உள்ளது. அந்த அறை மூதாட்டி தங்கியிருந்ததை கண்டு கலெக்டர் முருகேஷ் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் மருசூர் ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ்குமார் மற்றும் கிராமநிர்வாக அலுவலர் ஆகியோரிடம் பாழடைந்த அரசு கட்டிடத்தில் எப்படி தங்க வைத்துள்ளீர்கள் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யபடும் என்று எச்சரித்தார்.
உடனடியாக மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.
- குடும்ப தகராறில் மன உளைச்சலில் இருந்தார்
- போலீசார் விசாரணை
தூசி:
வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கூட்ரோடு வாசவி நகரை சேர்ந்தவர் தியாகராஜன். அவரது மனைவி கிருபா என்கிற ரம்யா (வயது 29).
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று ரம்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தூசி போலீஸ் இணையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாம்பு குறுக்கே வந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மனைவி காவேரி (வயது 48), விவசாயக் கூலி தொழிலாளி.
இவர் கடந்த 25-ந் தேதி பகல் 12 மணி அளவில் அதே கிராமத்தில் வயல்வெளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாம்பு குறுக்கே வந்ததால் அலறி அடித்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மோரணம் போலீசில் புகார் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- முன்னாள் அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
- பொதுமக்களுக்கு நீர், குளிர்பானம், மோர் வழங்கபட்டது
ஆரணி:
ஆரணிஅடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 151-வது ஆண்டு தேரோட்ட பிரம் மோற்சவ விழா கடந்த 20-ந் தேதி காப்பு காட்டுதலுடன் தொடங்கியது,
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நடந்தது. அதனை தொடர்ந்து ஆடு, கோழி பலியிட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரனுக்கு கோவில் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டன.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முரளி, ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா பாபு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் அசோக்கு மார் உள்பட திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த திருத்தேர் மாட வீதிகளின் வழியாக வலம் வந்தது. தேர் மீது உப்பு, மிளகு, பொரி உருண்டை, சாக்லேட், இனிப்பு போன்றவற்றை வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பொதுமக்களுக்கு நீர், குளிர்பானம், மோர் ஆகியவை வழங்கபட்டது.
- வலிப்பு வந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
நேற்று ஏழுமலை கண்டைநல்லூர் பகுதியில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றிருந்தார். வேலை செய்து கொண்டிருந்தபோது ஏழுமலைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
வலியால் துடித்துக் கொண்டிருந்த ஏழுமலை அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி ஏழுமலை பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து கீழ் கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஏழுமலையின் மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிரியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
- மதிய உணவு தரமாக உள்ளதா என ஆய்வு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மருசூர் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 156 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உட்பட 6 ஆசிரியர் ஆசிரியை பணிபுரிந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தச்சூர், வேலப்பாடி, அரையாளம், ஆரணி டவுன், உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருசூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது 3ம் வகுப்பறைக்குச் சென்ற முருகேஷ் 6-வது வாய்ப்பாடு தெரியுமா என்று கேட்டார். அதற்கு மாணவ மாணவிகள் அனைவரும் தெரியாது என்று கையை உயர்த்தி பதிலளித்தனர். இதனால் கலெக்டர் அதிர்ச்சியடைந்தார்.
இதனையொடுத்து வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் 10-ம் வாய்ப்பாடு தெரியுமா என்று கேட்டதற்கு மாணவ மாணவிகள் தெரியாது என்று பதில் அளித்தனர். இதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களை அழைத்து மாணவர்களுக்கு ஏற்றாற் போல் பாடத்தை நடத்தி புரிய வைக்க வேண்டும் என்று கலெக்டர் கண்டித்தார்.
அடுத்த முறை நான் பள்ளிக்கு வரும் போது மாணவ மாணவிகள் அனைவரும் 1-ம் வாய்ப்பாடு முதல் 12-ம் வாய்ப்பாடு வரை மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
சத்துணவு கூடத்திற்கு சென்று மாணவ மாணவிகளுக்கு வழங்கபட்டு வரும் மதிய உணவை தரமாக உள்ளதா என உணவை உண்டு ஆய்வு செய்தார்.






