என் மலர்
நீங்கள் தேடியது "கோழிகளுடன் ஆர்ப்பாட்டம்"
- ஆஸ்பத்திரியில் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல்
- கால்நடைகளுடன் ஊர்வலமாக வந்தனர்
வந்தவாசி:
வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த கால்நடை மருத்துவ மனையில் மருத்துவர்கள் மருத்துவ உதவியாளர், கால்நடைக்கு ஊசி போடும் தகுந்த பயிற்றுநர்கள் 6 மாத காலமாக இல்லாததால் கால்நடைகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றன.
மேலும் மாடுகள் கோமாரி மற்றும் கழிச்சல் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
வந்தவாசி கால்நடை மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள், உபகரணங்கள் ,பணியாளர்கள் இல்லாத காரணத்தால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை கண்டித்து மாடுகள் மற்றும் கோழிகளை வைத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து வந்தவாசி தாசில்தார் அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்டோர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கால்நடை மருத்துவர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தாசில்தார் ராஜேந்திரனிடம் மனு கொடுத்தனர். இதனால் தாலுகா அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






