என் மலர்
நீங்கள் தேடியது "Died by falling into a tank"
- வலிப்பு வந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
நேற்று ஏழுமலை கண்டைநல்லூர் பகுதியில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றிருந்தார். வேலை செய்து கொண்டிருந்தபோது ஏழுமலைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
வலியால் துடித்துக் கொண்டிருந்த ஏழுமலை அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி ஏழுமலை பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து கீழ் கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஏழுமலையின் மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






