என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது பரிதாபம்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 33 வார்டுகள் உள்ளன.

    இதில் அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி தினகரன் இந்துமதி தம்பதினயினரின் 4வயது ஆண் குழந்தை ஹோம்நாத் தெருவில் சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது தெருவில் சுற்றி திரிந்த வெறிநாய் திடிரென 4 குழந்தைகளையும் கடிக்க முயன்றது. அப்போது குழந்தைகள் அலறல் சத்தத்துடன் ஓட்டம் பிடித்தனர்.

    இதில் மற்ற குழந்தைகளும் லேசான காயத்துடன் தப்பினார்கள். 4 வயது குழந்தை ஹோம்நாத் தரையில் விழுந்ததால் வெறிநாய் தொடை கை கால் உள்ளிட்ட பகுதிகளில் கடித்து குதறியது.

    இதில் படுகாயமடைந்த குழந்தை ஹோம்நாத் ஆரணி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றான். ஆரணி நகராட்சியில் வெறிநாய் குழந்தைகள் முதியவர்களை கடித்து குதறும் நிலைமை தொடர்கதையாக உள்ளது.

    இது சம்மந்தமாக நகராட்சி நிர்வாகம் வெறிநாய்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்து வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இன்று காலை மாசிமக தேர்திருவிழா 2 ஆண்டாக நடந்தது.

    உற்சவர் சோமாஸ்கந்தர் தேர் திருவீதி உலாவை ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன் விடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி, துணை த்தலைவர் சாலம்மாள், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, கண்ணமங்கலம் மின் வாரிய உதவி பொறியாளர் சிலம்பரசன் உள்படபலர் கலந்து கொண்டனர்.

    தேரோட்டம் நடைபெற உள்ள வீதிகளில் மின் வாரிய பணியாளர்கள் மின் வயர்களை அகற்றி பின்னர் சரி செய்தனர்.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவாஜி, கிராம பெரிய தனம் மு.நடராஜன், கு.ஆறுமுகம், விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • பலரை தனிப்படை போலீசார் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
    • அரியானாவில் தனிப்படையினரின் வேட்டையில் கும்பல் சிக்கினால் மட்டுமே முழுமையாக பணத்தை மீட்க முடியும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பலரை தனிப்படை போலீசார் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர். எனினும் மற்ற குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. பணமும் மீட்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் கோலார் பகுதியில் இருந்து நிஜாமுதீன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். நேற்று விசாரணை 4-வது நாளாக நடந்தது.

    விசாரணையின் முடிவில் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்திற்கு நிஜாமுதீன் தான் மூளையாக செயல்பட்டதாக போலீசார் கூறினர்.

    அவரை போலீசார் நேற்று கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர். ஏ.டி.எம். கொள்ளையில் 5 பேர் கைதான பிறகும் பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அரியானாவில் தனிப்படையினரின் வேட்டையில் கும்பல் சிக்கினால் மட்டுமே முழுமையாக பணத்தை மீட்க முடியும்.

    மேலும் கொள்ளை போன ரூ.67 லட்சத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • பவுர்ணமி இன்று காலை 5.08 மணிக்கு தொடங்கி நாளை காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது.
    • 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில், மாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று (திங்கட்கிழமை) காலை 5.08 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவி வருகிறது.
    • வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவி வருகிறது.

    குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக உள்ள கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி, வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

    ஆனால் இந்த வீடியோக்களுக்கும் மேற்கண்ட பகுதிகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்கள் பரவி வந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இதற்கிடையே வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர போலீஸ், சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்கள் தெரிவிக்க மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கும் விதமாக செல்போன் எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக ஒவ்வொரு பனியன் நிறுவனத்திலும் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக்கூறி, வடமாநில தொழிலாளர்கள் பலரும் குடும்பத்தினருக்கு வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். பீகார், ஒடிசா, உ.பி., ம.பி. மற்றும் ஜார்க்கண்ட் இந்த பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தற்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் வீடியோவாக குடும்பத்தினருக்கு வெளியிட்டு வருகிறார்கள்.

    மேலும், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

    இதேபோல கோவையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை அதிகாரிகள், போலீசார் நேரில் சந்தித்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், யாரும் அச்சப்பட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோவை குறிச்சி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்து ரையாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதால் யாரும் பயப்படத் தேவையில்லை என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறோம். மேலும் இந்தியில் அச்சிடப்பட்ட விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் இருக்கும் தொடர்பு எண்ணுக்கு பேசும்படியும் கூறி இருக்கிறோம். தொழிலாளர்களிடம் பேசியதில் அவர்கள் தங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை என கூறி உள்ளனர் என்றார்.

    இதேபோல டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து தைரியம் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி குனியமுத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளவர்கள் எங்களை சகோதரர்களை போல் நடத்துகிறார்கள். எங்களுக்கு இங்கு எந்த குறையும் கிடையாது. எங்கள் ஊரில் எவ்வாறு இருந்தோமோ அதே போன்று இங்கும் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் தாக்கப்படுகிறோம் என்பது வதந்தி என்பதை தெரிவிக்கிறோம். இன்று மட்டுமில்லை இன்னும் எத்தனை வருடம் இங்கு இருந்தாலும் தமிழர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கூறுகையில் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசி உள்ளேன். யாரும் தாங்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை. அவர்கள் ஊரில் எப்படி சுதந்திரமாக இருந்தார்களோ, அதேபோல் இங்கும் சுதந்திரமாக இருப்பதாகவே தெரிவித்தனர் என்றார்.

    • வெல்டிங் பணியின் போது தீப்பொறி விழுந்ததால் விபரீதம்
    • ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலையில் தனியார் பர்னீச்சர் கடை உள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக மேல் தளத்தில் வெல்டிங் வேலை செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

    வெல்டிங் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென தீப்பொறி அருகில் இருந்த பஞ்சு இருக்கைகள் மர பிளைவுட்கள் மீது பட்டன. இதில் பஞ்சு, பிளைவுட்கள் தீப்பிடித்து மளமளவென எரிந்தன.

    பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதில் ரூ.1லட்சம் மதிப்பிலான மெத்தைகள் இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. பர்னீச்சர் கடையில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு டவுன் திருவத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற தலமான பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சனி பிரதோஷ விழா நடைபெற்றது.

    சனிப்பிரதோஷம் முன்னிட்டு அம்மையப்பன் அலங்காரம் செய்யப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்து கோவில் வளாகத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்றைய தினம் சனி பிரதோஷம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோன்று செய்யாறு அருகே உள்ள வட தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள தவமுலை நாயகி தண்டலபுரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விழா நடைபெற்றது.

    மூலவர் அலங்காரம் செய்யப்பட்டு சனிப்பிரதோஷம் விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கண்ணமங்கலம் பகுதியில் கொளத்தூரில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நந்தி பகவானுக்கு நேற்று மாலை நடைபெற்றது. இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவில், எஸ் தாங்கல் சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நந்தி பகவானுக்கு சிறப்பாக நடைபெற்றது.

    • ஆள்சேர்ப்பு இயக்குனர் தகவல்
    • 15-ந்தேதி கடைசி நாள்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சென்னை தலைமையக ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குனர் கர்னல் மோனிஷ்குமார் பாத்ரே நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய ராணுவத்தின் அக்னிவீரர் திட்டத்தில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.

    சேர விருப்பமும், தகுதி உள்ள 17 வயது முதல் 21 வயதுக்குள் உள்ள ஆண்கள், பெண்கள் ராணுவத்தில் சேர்ந்திடலாம். இதற்காக www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்திட வேண்டும்.

    தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவள்ளுர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற 15-ந்தேதி கடைசி நாள் தேர்வு கட்டணம் 250 ரூபாய் வங்கி மூலம் செலுத்தலாம். மின்னஞ்சல், மொபைல் எண், ஆதார் எண்ணை தவறாமல் பதிவிட வேண்டும்.

    விண்ணப்பதாரர்களுக்கு முதலில் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். 1.10.2002 முதல் 1.4.2006-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

    என்.சி.சி. உள்ளிட்ட பல்வேறு வகைகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கி முன்னுரிமை வழங்கப்படும். ராணுவத்தில் ஆள்சேர்ப்பு நியமானதாகவும், வெளிப்படையாகவும் நடக்கிறது. முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள். யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்.

    ஆள்சேர்ப்பு செயல்முறை என்பது தானியங்கு முறை. எந்த நிலையிலும், யாராலும் உதவ முடியாது. எனவே, விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி நகரில் ஆரணிப்பாளையம் காந்தி ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் திருடிச் சென்றனர்.

    கோவில்களில் திருட்டு

    இதேபோல ஆரணிப்பா ளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலிலும் பூட்டை உடைத்து மர்ம கும்பல் உண்டியலை தூக்கிச் சென்றனர்.

    மேலும் ஆரணி - சேத்துப் பட்டு நெடுஞ்சாலையில் சக்தி நகரில் அமைந்துள்ள முக்கிய அம்மன் கோவிலிலும் உண்டியல் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர்.

    கோவில்களில் திருட்டை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச் சந்திரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், கொள்ளையர்கள வேலூர் ஓட்டேரி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 20), 17 வயது சிறுவன் மற்றும் வந்தவாசியை அடுத்த கீழ்கொவளைவேடு பகுதியை சேர்ந்த பிரபுதேவா (22) என்பது தெரியவந்தது.

    அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் உல்லாச வாழ்க்கைக்காக கோவில் உண்டியல்களில் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.

    ைகதான 3 பேரையும் ேகார்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தனுஷ், பிரபுதேவா ஆகியோரை வேலூர் சிறையிலும், 17 வயது சிறுவனை கடலூர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் பாராட்டினார்.

    • திருமண ஆசை காட்டி பலாத்காரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    செங்கம் தாலுகா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 22). இவர், திருவண் ணாமலை அய்யம்பாளையம் அருகே உள்ள ஒரு கிரா மத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியி டம் பழகி வந்தார். அப்போது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். அவளது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பெற்றோர் சிறு மியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில் அவள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது சதீஷ் தான் கார ணம் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர்போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார்வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.

    • 6-ந்தேதி, 7-ந்தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • நாளை மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை 6-ந்தேதி காலை 5.08 மணிக்கு தொடங்கி 7-ந்தேதி காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 6-ந்தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 6-ந்தேதி, 7-ந்தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதோடு, பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வசதியாக அதிகாலை தொடங்கி இரவு வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரும் 6-ந்தேதி (நாளை) மாசி மகத்தை முன்னிட்டு பள்ளி கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமி நதியில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • கிணற்றில் பிணமாக தொங்கினார்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 48) விவசாயி. இவருக்கு கவிதா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கவிதா தன் குழந்தைகளுடன் தேத்துறை என்ற கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று நித்தியானந்தத்திற்கு வயிற்று வலி அதிகமாகவே வீட்டின் பின்புறம் கிணற்றில் ராட்டினம் கட்டும் கம்பியில் சேலையில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விட்டார்.

    இது சம்பந்தமாக கவிதா கொடுத்த புகாரில் செய்யார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×