என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவத்தில் சேர யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்
    X

    ராணுவத்தில் சேர யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்

    • ஆள்சேர்ப்பு இயக்குனர் தகவல்
    • 15-ந்தேதி கடைசி நாள்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சென்னை தலைமையக ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குனர் கர்னல் மோனிஷ்குமார் பாத்ரே நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய ராணுவத்தின் அக்னிவீரர் திட்டத்தில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.

    சேர விருப்பமும், தகுதி உள்ள 17 வயது முதல் 21 வயதுக்குள் உள்ள ஆண்கள், பெண்கள் ராணுவத்தில் சேர்ந்திடலாம். இதற்காக www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்திட வேண்டும்.

    தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவள்ளுர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற 15-ந்தேதி கடைசி நாள் தேர்வு கட்டணம் 250 ரூபாய் வங்கி மூலம் செலுத்தலாம். மின்னஞ்சல், மொபைல் எண், ஆதார் எண்ணை தவறாமல் பதிவிட வேண்டும்.

    விண்ணப்பதாரர்களுக்கு முதலில் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். 1.10.2002 முதல் 1.4.2006-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

    என்.சி.சி. உள்ளிட்ட பல்வேறு வகைகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கி முன்னுரிமை வழங்கப்படும். ராணுவத்தில் ஆள்சேர்ப்பு நியமானதாகவும், வெளிப்படையாகவும் நடக்கிறது. முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள். யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்.

    ஆள்சேர்ப்பு செயல்முறை என்பது தானியங்கு முறை. எந்த நிலையிலும், யாராலும் உதவ முடியாது. எனவே, விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×