என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்னீச்சர் கடையில் தீ விபத்து
- வெல்டிங் பணியின் போது தீப்பொறி விழுந்ததால் விபரீதம்
- ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலையில் தனியார் பர்னீச்சர் கடை உள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக மேல் தளத்தில் வெல்டிங் வேலை செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
வெல்டிங் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென தீப்பொறி அருகில் இருந்த பஞ்சு இருக்கைகள் மர பிளைவுட்கள் மீது பட்டன. இதில் பஞ்சு, பிளைவுட்கள் தீப்பிடித்து மளமளவென எரிந்தன.
பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் ரூ.1லட்சம் மதிப்பிலான மெத்தைகள் இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. பர்னீச்சர் கடையில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






