என் மலர்
நீங்கள் தேடியது "தூக்கிட்டு சாவு"
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் கோபி (வயது 22), கட்டிட தொழிலாளி.
இவர், கடந்த 16-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு
சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச் சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் சேர்க் கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த நாட்றம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் நரைகுளம் பார்க்தெரு பகுதியை சேர்ந்தவர் குமாரி. இவரது மகள் திவ்யா (வயது 21). இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து சோளிங்கர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திவ்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திவ்யா தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மனைவி செல்வி இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு சாமுவேல் (வயது 19) என்ற மகம், ஒரு மகளும் உள்ளனர். சாமுவேல் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் முதலாம் ஆண்டின் அனைத்து பாட தேர்வுகளும் தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2-ம் ஆண்டு தேர்விலும் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயத்தில் இருந்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப தகராறில் மன உளைச்சலில் இருந்தார்
- போலீசார் விசாரணை
தூசி:
வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கூட்ரோடு வாசவி நகரை சேர்ந்தவர் தியாகராஜன். அவரது மனைவி கிருபா என்கிற ரம்யா (வயது 29).
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று ரம்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தூசி போலீஸ் இணையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போன் பார்த்ததை கண்டித்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அருகே உள்ள ஆற்காட்டான்குடிசை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் திலகா (வயது 17).
பென்னாத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சமீபத்தில் தேர்வு எழுதி முடித்தார். தற்போது விடுமுறையில் வீட்டில் இருந்த திலகா அடிக்கடி செல்போன் பார்த்ததாக கூறப்படுகிறது .
மேலும் வீட்டுவேலையும் செய்யவில்லை. இதனைஅவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த திலகா நேற்று வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார்.
மகள் தூக்கில் தொங்குவதைக் கண்ட அவரது பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே திலகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு சென்று மாணவியின் உடலைப் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல் நலக்குறைவால் விபரீதம்
- போலீசார் விசாரனை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 26) கோவில் அர்ச்சகர்.
அந்த பகுதியில் இருக்கும் 4 கோவில்களுக்கும் தின ந்தோறும் பூஜை செய்து வருவது வழக்கமாக கொண்டு இருந்தார்.
அருள்ராஜிக்கு உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை அடிக்கடி இருந்து வந்தது. இதற்காக மருத்துவ மனையில்சிகிச்சை பெற்றும் வந்தார். மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனால் மன உலைச்சலுக்கு ஆளானார். பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செயது கொண்டார். இதனை கண்ட அவரது தாயார் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீ சார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலூம் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப தகராறில் விபரீதம்
- மகன் இறந்த துக்கத்தில் மது பழக்கத்திற்கு அடிமையானார்
வேலூர்:
விரிஞ்சிபுரம் அருகே உள்ள இந்திரா நகர் நேரு வீதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 24) கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
இதற்கு பிறகு கணேஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமை யானார். தினமும் குடித்துவிட்டு வந்தார்.
இதனால் அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கணேஷ்குமார் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கில் தொங்கினார்.
அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரத்த புற்று நோய் இருந்ததால் குழந்தை இறந்தது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூரை சேர்ந்தவர் ராமன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
குழந்தை சாவு
இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. தம்பதியரின் மகள் ஜெஷ்விதா (வயது4) என்கிற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தைக்கு கடந்த 8 மாதமாக ரத்த புற்று நோய் இருந்து வந்தது.
இதனால் இவர்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவு செய்து காப்பாற்ற போராடினர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
ஐஸ்வர்யா தனது குழந்தை இறந்த நாள் முதல் மிகவும் சோகத்தில் இருந்தார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த ஐஸ்வர்யா நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது வீட்டில் சத்தம் கேட்டு கதவை உடைத்து ஐஸ்வர்யா வை காப்பாற்றினர்.
ஆனாலும் ஐஸ்வர்யா தனது குழந்தை இறந்ததை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஐஸ்வர்யா மீண்டும் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து கணவர் ராமன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்பத் தகராறால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி வஞ்சூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி சுகன்யா (வயது 26) தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை இதன் காரணமாக குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த சுகன்யா நேற்று வீட்டில் தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு விருதம்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுகன்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விருதம்பட்டு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி இந்திராநகரை சேர்ந்தவர் சேரளி (42) சிக்கன் கடை நடத்தி வந்தார். இதில் போதுமான வருமானம் இல்லை. இதனால் அவர் மனம் உடைந்தார். நேற்று வீட்டில் இருந்த சேரளி அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்துவாச்சாரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.






