என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனுநீதி முகாமில் 581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    தண்டராம்பட்டு அருகே நடைபெற்ற மனுநீதி முகாமில் 581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முருகேஷ் வழங்கிய போது எடுத்த படம்.

    மனுநீதி முகாமில் 581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • கலெக்டர் முருகேஷ் வழங்கினார்
    • 15-ந் தேதி வரை நடைபெறுகிறது

    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு அருகே ஆத்திப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்வலசை, கீழ்வலசை, மேல்முத்தானூர், அக்கரைப்பட்டி, செம்பட்டி ஆகிய மலை கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் ஆத்திப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்தது.

    இதற்காக அப்பகுதி பொதுமக்கள் 670 மனுக்கள் அளித்திருந்தனர். அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து 581 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மனுநீதி நாள் முகாமுக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி 581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ஒரு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர் சுகாதாரம் போக்குவரத்து வசதி சரியாக இருந்தால் அந்த கிராமம் முன்னேறி விடும். கிராமப் பகுதியில் உள்ள குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்தால் அவர்களுடைய எதிர்காலம் நல்ல முறையில் இருக்கும்.

    குழந்தைகள் நல்ல முறையில் இருப்பதற்காகத்தான் தமிழக முதல்-அமைச்சர் காலை சிற்றுண்டி என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். கிராம பகுதியில் உள்ள குழந்தைகளை பட்டப்படிப்பு வரை படிக்கவைக்க வேண்டும். குழந்தை திருமணத்தால் எதிர்காலத்தில் கணவன் மனைவி இருவரும் கூலித் தொழிலாளியாகவே இருக்கின்றனர்.

    நல்ல முறையில் படித்தால் எதிர்காலத்தில் சுய தொழில் தொடங்க முடியும். வாழ்க்கையில் முன்னேற முடியும். திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தால் கடந்த ஆண்டு 15 பெண்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆகையால் கிராமப் பகுதியில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பெண் குழந்தைகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும்.

    கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தற்போது கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் கிராமப் பகுதியில் உள்ள தகுதியானவர்கள் அரசு மூலம் வழங்கியிருக்கக்கூடிய அடையாள அட்டையை வைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் இந்த பதிவு வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×