என் மலர்
திருவண்ணாமலை
- அதிகாரி தகவல்
- 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 159 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வரு கின்றன.
இதில் திருவண்ணாமலை சரகத்தில் 88 சங்கங்களும், செய்யாறு சரகத்தில் 71 சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் விவசாயிகளுக்கு ஓராண்டு வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன் மற்றும் மாற்றுத்திற னாளிகள் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் போன்ற கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வழங்கும் கடன் கள், தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர் மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீதம் வட்டியிலான கடன்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீதம் வட்டியிலான கடன்கள் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் 4 சதவீதம் வட்டியிலான கடன்கள் 2023-24-ம் நிதி ஆண்டிற்கு அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கடனுதவி களை அருகாமையில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பெற்று பயன்பெறலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்துள் ளார்.
- மேற்கு ஆரணி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி டவுன் கோட்டை வீதியில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி அனைவரையும் வரவேற்றார். துணை சேர்மன் வேலாயுதம் முன்னிலை வகித்தார் ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்கினர்.
இதில் ஆகாரம் காமக்கூர் முருகமங்கலம் புதுப்பாளையம் மற்றும் 9 ஊராட்சிகளில் முருங்கை மரக்கன்று உற்பத்தி பண்ணைகள் அமைப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்ற ப்பட்டன.
மேலும் வேளாண்மை துறை தோட்டக் கலைத்துறை சுகாதா ரத்துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளில் செயல்ப டுத்தப்பட்டு வரும் பணிகள் சிறப்பு திட்டங்கள் குறித்து கவுன்சிலரின் கேள்விக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும் சுகாதார துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பகுத்தறிவு மாமது, கீதா மோகன், ஏழுமலை, மற்றும் வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் சவிதா துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு
- 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பெருங்கற்கால இடுகாடு இருப்பது தெரிய வந்தது
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கீழ்நமண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரலாற்று ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், இந்த கிராமத்தின் வடமேற்கு பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால இடுகாடு இருப்பது தெரிய வந்தது.
இந்த இடுகாட்டில் தலா 3 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை விட்டம் கொண்ட 200-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் சேதமடைந்திருந்த கல்வட்டங்களிலிருந்து ஈமப்பேழையின் எச்சங்கள், இரும்புக் கருவிகள், கற்கருவிகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து இந்தப் பகுதியில் முறையான அகழாய்வு மேற்கொண்டால் பண்டைய தமிழர்களின் பண்பாட்டை உலகறிய செய்யலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கீழ்நமண்டி பகுதியில் முதல் கட்ட அகழாய்வு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது.
இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.
இதையொட்டி கீழ்நமண்டி அகழாய்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ், கீழ்நமண்டி அகழாய்வு மைய இயக்குநர் ஜி.விக்டர் ஞானராஜ், மைய பொறுப்பாளர் எம்.சுரேஷ், தெள்ளார் ஒன்றியக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வி.மூர்த்தி, ஆர்.குப்புசாமி, கீழ்நமண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஈ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற அகழாய்வு பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் பார்வையிட்டார். இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடத்தில் செப்.30-ஆம் தேதி வரை முதல் கட்ட அகழாய்வு பணிகள் செய்ய உள்ளோம். குத்துக்கல் மற்றும் மெருகூட்ட பயன்படுத்தப்பட்ட பள்ளங்களும் இங்கு காணப்படுகின்றன. இரும்பு காலத்தைச் சேர்ந்த மண்பாண்டங்களான கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மற்றும் மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஓடுகள் குறியீட்டு அடையாளங்களுடன் காணப்படுகின்றன.
புதிய வரலாற்றுக்கு முந்தைய மற்றும் இரும்பு காலங்களை கண்டறிய இந்த ஆய்வு வழி வகுக்கும். மேலும் இந்த பகுதியின் பண்பாட்டு கால வரிசையை புரிந்து கொள்ள உதவும் என்றனர்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- ஏராளமான பொதுமக்கள் தரிசனம்
போளூர்:
போளூரில் அமைந்துள்ள நற்குன்று ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் 14-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலையில் மூலவர் ஸ்ரீ பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றன.
சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிக்கு பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு வள்ளி தேவசேனா சமேதா ஸ்ரீ சுப்ரமணியர் கல்யாண கோலத்தில் ஊர் முழுவதும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் தீபாரதனை செய்து முருகனின் அருள் பெற்றனர்.
இதற்கு முன்னதாகவே போளூர் ஜெயம் குரூப் அன்னதான கமிட்டி மூலம் மதியம் 12 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜெயங்குருப்அன்னதான கமிட்டியின் தலைவர் பழனி, செயலாளர் ஜெகன், பொருளாளர் சக்திவேல், மற்றும் உறுப்பினர்கள் கணேசன், கோபிநாத், எஸ். ரமேஷ் பாண்டியன், சுரேஷ், தினகரன், பிரபாகரன் வேலு, யுவராஜ், கௌதம், பார்த்திபன், வெங்கடேசன், ரமேஷ், பழனி, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- குடும்ப பிரச்சினையால் தகராறு
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அடுத்த தேவிகாபுரம், பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 59) கூலித் தொழிலாளி. இவரது மகன் தங்கராஜ் (27). இவர் சென்னையில் பிளம்பராக வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு தங்கராஜுக்கும், தாசுக்கும், இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
ஆத்திரம் அடைந்த தங்கராஜ் தந்தை தாசை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் தாசை மீட்டு தேவிகாபுரம், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தாஸ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாசின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
- வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலை சுற்றும் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பவுர்ணமியன்றும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். சமீப நாட்களாக தினமும் பலர் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 10.17 மணியளவில் தொடங்கி நேற்று காலை 10.57 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கிரிவலப்பாதையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் கிரிவலப்பாதையில் செங்கம் சாலை சந்திப்பு பகுதியில் இருந்து அண்ணா நுழைவு வாயில் வரையில் பக்தர்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாத வகையில் தரைக்கடைகள், டீக்கடைகள், இளநீர் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சில டீக்கடைக்காரர்கள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளில் தங்கள் கடை முன்பு இருக்கைகளை போட்டு வைத்து இருந்தனர். இதனால் சாலையில் கூட்டத்துடன் நடக்க முடியாத முதியவர்கள் மற்றும் பக்தர்கள் நடைபாதையிலும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் ஈசான்ய மைதானத்தில் இருந்து ஈசான்ய லிங்கம் கோவில் வரை நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத வகையில் வரிசையாக கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் கண்டு கொள்ளவில்லை என்று பக்தர்கள் வேதனையாக தெரிவித்தனர்.
தொடர்ந்து 2-வது நாளாக நேற்று பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பகலில் வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோடை வெயில் தொடங்கிய காரணத்தினால் வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது. கோவிலுக்குள் பொது மற்றும் கட்டண தரிசன வழி மட்டுமின்றி கோவிலுக்கு வெளியிலும் சாலை வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்று வர போக்குவரத்து துறையின் மூலம் பஸ் வசதி மேற்கொள்ளப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் திடீரென பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் ரெயில் வந்ததும் பக்தர்கள் ஒருவரை, ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்.
இதனால் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் வேலூர் சாலையில் சந்தனக் கொடடா பகுதியில் வராவதி அருகே உள்ள கால்வாயில் அவ்வழியே வந்த கார் ஒன்று தடுப்பில் விபத்துக்குள்ளானது.
கார் பள்ளத்தில் கவிழாமல் மயிரிழையில் ஓரமாக நின்றது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்து சம்பந்தமாக வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவுர்ணமியை முன்னிட்டு குவிந்தனர்
- கோவிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.17 மணியளவில் தொடங்கியது. பங்குனி உத்திரம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்தவாறே இருந்தது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே கிரிவலம் செல்ல தொடங்கினர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பக்தர்கள் தரை சூட்டினால் ஓட்டமும், நடையுமாக சென்றனர்.
கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே மாலையில் கிரிவலம் சென்ற பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
- கோமுட்டி குளத்தை சுத்தம் செய்யாததால் ஆத்திரம்
- அண்டாவில் சாமி தீர்த்தவாரி நடந்தது
வந்தவாசி:
வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் கோமுட்டி குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடைபெற உள்ள நிலையில் கோமுட்டி குளத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் குளத்தை சுத்தம் செய்வதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரங்கநாத பெருமாள் சுவாமி ஊர்வலமாக சென்று கோமுட்டி குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடைபெறுவதற்காக சென்றபோது குளம் முழுவதும் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசியது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வந்தவாசி திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த நிலையில் குளத்தை சுத்தம் செய்யாததால் கோவில் பட்டாச்சா ரியார்கள் சிறிய அண்டாவில் வைத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யும் அவலம் ஏற்பட்டது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷே கங்கள் செய்யப்பட்டு சிறிய அண்டாவை வைத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் கோமுட்டி குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சிறப்பு பூஜைகள் நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே முருகர்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் அடுத்த ராயம்பேட்டை கிராமத்தில்மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விநாயகர், முருகர், பரிவாரதேவதைகள், சக்திவேல், கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்தும், கலசங்கள் அமைக்கப்பட்டும் யாக பூஜைகள் நடந்தது.
சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத பூஜைகள் நடத்தப்பட்டு, மேள தாளத்துடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, தீபாரனை செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், மூலவர் முருகபெருமானுக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தொடர்ந்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சக்திவேல், காவடி, உற்சவதிருத்தேர், செடல் ஊர்வலம் என பக்தர்கள் ராயம்பேட்டை கிராமத்தில் வீதி உலா வந்தனர்.
நிகழ்ச்சியில், அருணை குழுமம் எ.வ.வே.கம்பன், கீழ்பென்னாத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி எ.எஸ்.ஆறுமுகம், அதிமுக ஒன்றிய செயலாளர் தொப்பளான் மற்றும் கிராம பிரமுகர்கள், பொதுமக்கள், திருப்பணி குழுவினர்கள், விழாக்குழுவினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- விஷம் குடித்து மயங்கி கிடந்தார்
- போலீசார் விசாரணை
வாணாபுரம்:
வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூர் பகுதியைச்சேர்ந்த வர் கோவிந்தன். இவரது மனைவி ஜோதிமணி (வயது 47).
இவர் அங்கன்வாடி பணியாளராக இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றிஜோதி மணி இறந்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணி குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
- வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் அனுமந்தபேட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70). கூலி தொழிலாளி.
இவர் தினமும் சைக்கிளில் காஞ்சீபுரத்தில் வேலைக்கு சென்று திரும்பி வருவது வழக்கம். நேற்று முன்தினம் முத்துசாமி வேலை முடிந்ததும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் வந்த போது பின்னால் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ இவரது சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தது கிடந்தார்.
தகவல் அறிந்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த முத்துசாமியை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி அம்புஜம் அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






