என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் கடனுதவிகள்"
- அதிகாரி தகவல்
- 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 159 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வரு கின்றன.
இதில் திருவண்ணாமலை சரகத்தில் 88 சங்கங்களும், செய்யாறு சரகத்தில் 71 சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் விவசாயிகளுக்கு ஓராண்டு வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன் மற்றும் மாற்றுத்திற னாளிகள் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் போன்ற கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வழங்கும் கடன் கள், தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர் மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீதம் வட்டியிலான கடன்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீதம் வட்டியிலான கடன்கள் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் 4 சதவீதம் வட்டியிலான கடன்கள் 2023-24-ம் நிதி ஆண்டிற்கு அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கடனுதவி களை அருகாமையில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பெற்று பயன்பெறலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்துள் ளார்.






