என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The son who beat him to death"

    • குடும்ப பிரச்சினையால் தகராறு
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, அடுத்த தேவிகாபுரம், பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 59) கூலித் தொழிலாளி. இவரது மகன் தங்கராஜ் (27). இவர் சென்னையில் பிளம்பராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு தங்கராஜுக்கும், தாசுக்கும், இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த தங்கராஜ் தந்தை தாசை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் தாசை மீட்டு தேவிகாபுரம், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தாஸ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாசின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×