என் மலர்
நீங்கள் தேடியது "கோவிலில் திருக்கல்யாண வைபவம்"
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
பங்குனி உத்திரம் முன்னிட்டு மூஞ்சூர்பட்டு, வடதிருச்செந்தூர் மயில்வே லாடும் தொலாமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைப்பெற்றது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
சரியாக காலை 6 மணிக்கு வள்ளி தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வள்ளி தெய்வானை அம்பாளை அழைத்து வந்து பந்தல் மண்டபம் முகப்பில் வைத்து தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு திருவீதி உலா வந்து காட்சி அளித்து வருகிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அலங்க ரிக்கப்பட்ட கலசங்கள் வைத்து யாகசாலை அமைத்து 108 ஹோம திரவியங்கல் மற்றும் மூலிகைப்பொருட்களை கொண்டு 2 கால யாகப் பூஜை வளர்க்கப்பட்டது.
பின்னர் இரவு 7 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுப்பிரமணிய பெருமானுக்கும், வள்ளி தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வினை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வருகை தந்து முருகனை பக்தி கோசங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- ஏராளமான பொதுமக்கள் தரிசனம்
போளூர்:
போளூரில் அமைந்துள்ள நற்குன்று ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் 14-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலையில் மூலவர் ஸ்ரீ பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றன.
சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிக்கு பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு வள்ளி தேவசேனா சமேதா ஸ்ரீ சுப்ரமணியர் கல்யாண கோலத்தில் ஊர் முழுவதும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் தீபாரதனை செய்து முருகனின் அருள் பெற்றனர்.
இதற்கு முன்னதாகவே போளூர் ஜெயம் குரூப் அன்னதான கமிட்டி மூலம் மதியம் 12 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜெயங்குருப்அன்னதான கமிட்டியின் தலைவர் பழனி, செயலாளர் ஜெகன், பொருளாளர் சக்திவேல், மற்றும் உறுப்பினர்கள் கணேசன், கோபிநாத், எஸ். ரமேஷ் பாண்டியன், சுரேஷ், தினகரன், பிரபாகரன் வேலு, யுவராஜ், கௌதம், பார்த்திபன், வெங்கடேசன், ரமேஷ், பழனி, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






