என் மலர்
திருவண்ணாமலை
- போக்சோவில் கைது
- போலீசார் விசாரணை
போளூர்:
கலசபாக்கம் தொப்பானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அன் பரசன் (வயது 29), கட்டிட மேஸ்திரி. இவர் அதே ஊரை சேர்ந்த 16 வயது பெண்ணை காதலித்து வந்தார்.
மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடாம்பாளையம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு வெளியே யாருக்கும்.
தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களை இருவீட்டாரும் சேர்க்கவில்லை. இதனால் அன்பரசன் இளம்பெண்ணுடன் உறவினர் வீட்டில் தங்கினார்.
இந்த நிலையில் இளம்பெண் உடல்நிலை சரியில்லை என்று தனது தாயாருக்கு தெரிவித்தார். அவர் வந்து ஆதமங்கலம் புதூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தனை செய்ததில் இளம்பெண் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். இதையடுத்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய அன்பரசனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
- மது போதையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ் கரன் (வயது 52), இவர் சென்னையில் லாரி, கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
இவர். மனைவியை பார்ப்ப தற்காக அவ்வப்போது வருவார். 4 அல்லது 5 நாட்கள் தங்கி விட்டு மீண்டும் சென்னைக்கு சென்று விடுவார். லட்சுமி கூலி வேலைக்கு சென்று மகன்களை படிக்க வைத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல் லாதபோது பாஸ்கரன் மது அருந்திவிட்டு அறையில் உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் பாஸ்கரனின் தாய் அக்கம்பக் கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாஸ்கரன் தூக்குப்போட்டு கொண்டது தெரிய வந்தது.
உடனடியாக அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பாஸ்கரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அதிகாரிகள் சமரசம்
- ஊராட்சி தலைவர் ேபச்சுவார்த்தையையடுத்து கலைந்து சென்றனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் வார்டு உறுப்பினர் வெண்ணிலா செல்வம் உள்பட சுமார் 40 பெண்கள் படவேடு செல்லும் சாலையில் மந்தைவெளி பகுதியில் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்தனர்.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாள், ஊராட்சி செயலாளர் பழனி ஆகியோரிடம் பேசி வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.
இதையடுத்து பணி வழங்க ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு டவுன், காமராஜ்நகரில் ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார்.
நகர செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ரேசன் கடை கட்ட பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
மேலும் அதே பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒ.ஜோதி எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் மார்க்கெட் பகுதி, செய்யாறு பஸ் நிலையம், ஆரணி கூட்டு சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, கூல்ட்ரிங்ஸ், மோர் ஆகியவை வழங்கினர்.
நிகழ்ச்சியில் சம்பத், லோகநாதன், பார்த்திபன், சின்னதுரை, அண்ணாதுரை, கார்த்திகேயன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். டெய்லராக உள் ளார். இவரது மகன் சதீஷ் (வயது 23), ஏ.சி மெக்கானிக்காக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கொட்டாவூரிலிருந்து கீழ்பென்னாத்தூருக்கு சதீஷ் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு சென்ற அரசு பஸ் கீழ்பென்னாத்தூர் திண்டிவனம் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்றுவதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்றது.
இந்த நிலையில் அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த சதீசை உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
தமிழகம் முழுவதும் ஒரு கோடி திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வந்தவாசி தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது இதன் ஒரு பகுதியாக வந்தவாசி நகரத்தில் மட்டும் 5,500 உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம் தீயணைப்பு நிலையம் எதிரே நடந்தது நிகழ்ச்சிக்கு எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி நகராட்சி தலைவர் எச்சலால், துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், முன்னாள் நகராட்சி தலைவர் எல்.அப்சர் லியாகத், முன்னாள் நகர செயலாளர் எஸ்.அன்சாரி, நகர அவை தலைவர் அ.நவாப் ஜான், முன்னாள் கவுன்சிலர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அ.தயாளன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் உறுப்பினர் சேர்க்கும் முகாமினை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் டி.ராதா, கே.ஆர்.பழனி, மாவட்ட பிரதிநிதி எம்.டி.இப்ராகிம்சா, எம்.குடியரசு, இளைஞர் அணி நகர செயலாளர் கோமாதா சுரேஷ், கவுன்சிலர்கள் அன்பரசு, ஜெயபிரகாஷ், நூர் முஹம்மது, மருது சரவணகுமார், சந்தோஷ் குமார், முன்னாள் கவுன்சிலர்கள் வட்டச் செயலாளர்கள் சர்தார், ரவி, புருஷோத்தமன், ஜெகன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முடிவில் துணைச் செயலாளர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார்.
- குழந்தை வரம் கேட்டு நேர்த்திக்கடன்
- தீ மிதித்து பெண்கள் வழிபாடு
சேத்துப்பட்டு:
தேசூர் அடுத்த திருமால்பாடி கிராமத்தில் குளக்கரை அருகே உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது.
இதனையொட்டி வள்ளி தெய்வானை முருகர் உற்சவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வைத்து சரவணன் ஜோதி சுரேஷ் பாஸ்கரன் சார்பில் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, தங்க தாலி, வரிசை தட்டுகள் வைக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது.
மறுநாள் மூலவர் பழனி ஆண்டவர், உற்ச வர் வள்ளி தெய்வானைக்கு பல்வேறு மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. பின்னர்திருவிழா கொடி ஏற்றப்பட்டு காப்பு கட்டப்பட்டது. கண்டராமன் குளத்திலிருந்து பூக்கள், பூ கரகம் ஜோடித்துக் கொண்டு வந்து கோவிலில் வைத்தனர்.
மறுநாள் 108 சுமங்கலி பெண் கள் பால் குடத்துடன் வீதி உலா வந்து பழனி ஆண்டவருக்கும் உற்சவர் வள்ளி முருகன், தெய்வானை ஆகிய சுவா மிகளுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
நேற்று நேர்த்திக்கடனாக மிளகாய் இடித்து தூள் செய்து கரைத்து திரண்ட பக்தர்கள் மீது நேர்த்திக்கடனாக அபி ஷேகம் செய்தனர். மேலும் குழந்தை வரம் கேட்டு பெண்கள் பக்தர் மார்பில் கல் உரலை வைத்து இதில் மஞ்சள் போட்டு குழந்தை வரம் கேட்கும் பெண்கள் உலக்கை கொண்டு இடித்தனர்.
அதன்பின் பழனி ஆண்டவர் பாதத்தில் மஞ்சள் வைத்து பூஜை நடந்தது. இதனை யொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட் டது. பம்பை, உடுக்கை, மேள கச்சேரியுடன் புஷ்ப பல்லக்கில் பழனியாண்டவர் வீதி உலா வந்தார்.
அப்போது 21 அடியில் உயரம் பறக்கும் காவடியில் பறந்து வந்து பக்தர் பழனி ஆண்டவருக்கு மாலை அணிவித்தார். 5 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி விழா நடந்தது.
இடும்பன் சுவாமிக்கும் பூஜை நடந்தது. ஏற்பாடு களை திருமால்பாடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் (வயது 54).
திண்டிவனத்தில் தாசில்தாரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை (48). இவர்களது மகன் சிவசங்கரன்.
இவர்கள் 3 பேரும் காரில் நேற்று காலை காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றனர். காரை சிவசங்கரன் ஓட்டி சென்றார். தரிசனம் முடித்து விட்டு ஊருக்கு திரும்பினார். இரவு 10 மணி அளவில் காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் செய்யாறு அடுத்த நெடுங்கல் கூட்ரோடு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மேல்மருவத்தூரில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.
ெநடுங்கல் கூட்ரோடு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த வெங்கட சுப்பிரமணியின் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பூங்கோதை, சிவசங்கரன் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடசுப்பிரமணி உடலை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாசில்தார் ஒருவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 54-ம் ஆண்டாக நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
போளூர்:
இந்திய துணை கண்டத்தில் 18 புராணங்கள் முக்கியமானவை அதில் ஒன்று வன்னிய புராணம் ஆகும்.
அதன் அடிப்படையில் கிராமங்கள் தோறும் பங்குனி மாதம் காமாட்சி அம்மனை வழிபட்டு காமாட்சி அம்மன் திருவிளையாடல் என்கின்ற வன்னிய நாடகம் நடத்தப்படுவது வழக்கமாகும்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் பெரியகரம் மதுரா, பூமணக்கும் பூங்கொல்லைமேடு கிராமத்தில் எழந்தருளிருக்கும் காமாட்சியம்மன் திருக்கோவில் 54- ஆண்டு பங்குனி மாத காமாட்சி அம்மன் திருவிளையாடல் என்கின்ற வன்னிய நாடகம் நடைபெற்றது.
5 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள்: வாதாபி, எனதாபி, தவநிலை, எனதாபி, திக்குவஜயம் இரண்டாம் நாள் :காமாட்சியம்மன் உற்பனம் (வன்னியன் அக்னியில் தோன்றுதல்) மூன்றாம் நாள்: லட்சுமி குறத்தி அவதாரமும் அம்மன் படை எடுப்பு நான்காம் நாள்: காமாட்சி அம்மன் இடைச்சி அவதாரம் வஜ்ரபாகு தூது ஐந்தாம் நாள்: வாதாபி, எனதாபி மடிவு வன்னியன் பட்டாபிஷேகம் ஆகிய ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த நாடகத்தில் பூங் கொல்லைமேடு, பெரியகரம், காந்திநகர் பாப்பான்குளம், ராஜிவ்நகர், நைனாவரம் ஆகிய கிராமத்திலிருந்து ஏராளமான பொதுமக்களும் கண்டு களித்தனர்.
- மேல்மருவத்தூரில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.
- நெடுங்கல் கூட்ரோடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
செய்யாறு:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (வயது 54).
திண்டிவனத்தில் தாசில்தாரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை (48). இவர்களது மகன் சிவசங்கரன்.
இவர்கள் 3 பேரும் காரில் நேற்று காலை காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றனர். காரை சிவசங்கரன் ஓட்டி சென்றார். தரிசனம் முடித்து விட்டு ஊருக்கு திரும்பினார். இரவு 10 மணி அளவில் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் செய்யாறு அடுத்த நெடுங்கல் கூட்ரோடு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மேல்மருவத்தூரில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.
நெடுங்கல் கூட்ரோடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த வெங்கட சுப்பிரமணியின் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பூங்கோதை, சிவசங்கரன் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடசுப்பிரமணி உடலை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாசில்தார் ஒருவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலை சம்பந்தமாக வெளியே சென்றிருந்தார். பின்னர்
வீடு திரும்பிய சதீஷ்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து சதீஷ்குமார் சோளிங்கர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2-வது முறையாக நடவடிக்கை
- செய்யாறு கோர்ட்டில் ஒப்படைத்தனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரியவேளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் சுபா ஷினி (வயது 13). இவர் செய் யாறில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் 27.8.2014 அன்று பள் ளிக்குச் செல்வதற்காக கிரா மத்தில் உள்ள பஸ் நிறுத்தத் தில் அரசு பஸ்சில் ஏற முயன் றார். அப்போது பஸ்சில் சிக்கி சுபாஷினி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்தில் இறந்த சுபாஷி னிக்கு நஷ்டஈடு தொகை வழங்கக் கோரி அவரது பெற்றோர் சார்பில் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி விபத் தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ.8 லட்சத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப் புரம் மண்டலம் வழங்க வேண்டும் என்று கடந்த 16.10.2019 அன்று உத்தரவிட்டார்.
2 வருடங்களுக்கு மேலாகியும் நஷ்டஈடு வழங்காததால் சுபாஷினியின் பெற்றோர் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவின் பேரில் விசாரணை மேற்கொண்ட சார்பு நீதிபதி குமரவர்மன். நஷ்டஈடு தொகையை அச லும், வட்டியுமாக சேர்த்து ரூ.14.35 லட்சத்தை போக்குவரத்துக் கழகம் செலுத்த வேண் டும் என்றும். தவறினால் அரசு பஸ் ஜப்தி செய்யப்படும் என்று கடந்த 29.8.2022 அன்று உத்தரவிட்டு இருந் தார்.
அந்த உத்தரவின் பேரில் 2.9.2022 செய்யாறிலிருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
உடனே போக்குவரத்து கழகம் சார்பில் விபத்தில் இறந்த மாணவியின் பெற்றோரிடம் நீதிமன்றம் உத்தரவிட்ட நஷ்டஈடு தொகையில் ரூ.13.64 லட்சத்தை செலுத்தி விட்டு பஸ்சை மீட்டுச் சென்றனர்.
மீதி தொகையான ரூ.72 ஆயிரத்தை மனுதாரருக்கு போக்குவரத்துக் கழகம் வழங்காத காரணத்தால், 2-வது முறையாக செய்யாறு பஸ் நிலையத்தில் சேலம் செல்ல இருந்த அரசு பஸ்சை நீதி மன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து செய்யாறு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.






