என் மலர்
திருவண்ணாமலை
- வருகிற 20-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் நடத்தப்படும் மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் வரும் 20-ந் தேதி முதல் ஒவ்வொரு பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில் மாற்றுத்தி றனாளிகள் மாற்றுத்தி றனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய புதிய தேசிய அடையாள அட்டை வழங்க உள்ளன. இதற்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 4 புகைப்படத்துடனும்
மேலும் அடையாள அட்டை புதுப்பிக்க ஏற்கெனவே பெறப்பட்ட தேசிய அடையாள அட்டையுடன் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இணையதள பதிவு முகாமில் மாற்றுத்திறனாளி நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்.
- தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தூசியில் குளம் மற்றும் சித்தேரியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தூசி கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி கீதா இவர்களுக்கு இளமாறன் (வயது8), என்ற மகனும் ரித்திகா (6) என்ற மகளும் இருந்தனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.
இளமாறனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் மாலை பள்ளியிலிருந்து வந்ததும் உடைகளை மாற்றிக் கொண்டு தனது பெற்றோரிடம் பிறந்தநாள் கேக் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
பின்னர் வீட்டிலிருந்து சக மாணவர்களோடு விளையாடுவதற்காக வெளியில் சென்றார்.
நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து நேற்றிரவு தூசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் செய்யாறு தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தூசியில் குளம் மற்றும் சித்தேரியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சித்தேரியில் காணாமல் போன சிறுவன் இளமாறன் பிணமாக மீட்கப்பட்டார். சிறுவனின் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
பிறந்த நாளில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டது அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாணாபுரம்:
வெறையூர் அருகே உள்ள சு.நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகன் பிரதீப் (வயது 5). இவன் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு செய்யாறு பகுதியை சேர்ந்த வாலிபருடன் கடந்த மாதம் 10-ந் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் இளம்பெண் கடந்த 1-ந்தேதி வேலைக்கு சென்று வருவதாக அதிகாலை சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் பெண்ணின் தம்பி இளம்பெண்ணை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி உள்ளனர்.
இளம் பெண் கிடைக்காததால் இது குறித்து பிரம்மதேசம் போலீசில் பெண்ணின் தம்பி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி யாராவது கடத்திச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
- உடல் நலக்குறைவால் விரக்தி
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
செங்கம் தாலுகா கல்லரைபாடி பகுதியைச் சேர்ந்தவர் சத் தியமூர்த்தி (வயது 28), திருமணம் ஆனவர்.
இவர் திருவண்ணாமலை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர் திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் பகுதியில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.
இவருக்கு கடன் தொல்லையும், உடல் நலக்குறைபாடும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
மயக்க நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.2 லட்சம், நகைகளை கொள்ளை கும்பல் அள்ளி சென்றனர்
- போலீசார் விசாரணை
வேட்டவலம்:
வேட்டவலம் அருகே ஓலைப்பாடி ஊராட்சி மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி தேவி வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
இந்த நிலையில் முருகன், தேவி மற்றும் மகன் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் அதி காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் 2 பவுன் நகைகளை மர்ம கும்பல் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து முருகன் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மங்கள வாத்தியங்கள் முழங்க சாமி ஊர்வலம்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பங்குனி உத்திர விழாவையொட்டி திருவண்ணாமலை தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவையொட்டி அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்தார்.
கடந்த 4-ந் தேதி பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி கோவிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தாசினம் செய்தனர். அன்று இரவு கோவில் கொடிமரம் முன்பு அருணாச லேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கல்யாண மண்டபத்தில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கடந்த 6-ந் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் நலங்கு உற்சவம், திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. அதைதொடர்ந்து நேற்று விழா நிறைவாக மதியம் சுமார் 12 மணியளவில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்கரத்தில் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் திருக்கல்யாணத்தின் போது வைக்கப்பட்ட முளைத்த நவதானியங்களை குளக்கரையில் உள்ள தொட்டியில் கரைத்து குளத்தில் விட்டனர்.
பின்னர் தாமரை குளம் ராஜா மண்டபத்தில் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் அங்கிருந்து கோவிலுக்கு சாமி புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து குமரக்கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
- ரூ.120 கோடியில் அமைக்கப்படுகிறது
- தண்டராம்பட்டு, தானிப்பாடி வழியாக முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டத்தின் செயல்படுத்தப்படுகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் இருந்து அரூர் வரை ரூ.120 கோடி மதிப்பீட்டில் 4 வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.
4 வழிச்சாலை
திருவண்ணாமலையில் இருந்து அரூர் வரை தண்டராம்பட்டு, தானிப்பாடி வழியாக முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பக்க கால்வாய், மேம்பாலம், நீர்வரத்து கால்வாய், சிறுபாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர்.எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
அப்போது பணிகள் தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- குடும்ப பிரச்சனையில் நர்சு குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முதலில் சூர்யாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து இளைய மகன் உதயகுமார் உடலையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை அடுத்த சோமாசிப்பாடி அருகே உள்ள வற்றபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சூர்யா (வயது32) சோமாசிபாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இத்தம்பதிக்கு லட்சகுமார் (4), உதயகுமார் (1) என்ற 2 குழந்தைகள் இருந்தனர்.
சின்னராசுக்கும் சூர்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சனையில் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சின்னராசு திண்டிவனத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு சென்று விட்டு நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்கு வந்தார்.
கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது தாயிடம் அவர்கள் குறித்து கேட்டார். அவருக்கும் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இதையடுத்து 2 பேரும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சூர்யாவின் செல்போனுக்கு போன் செய்த போது அது அங்குள்ள ஏரிக்கரையில் உள்ள கிணற்றின் அருகே இருந்து சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு சென்று தேடி பார்த்தனர். கிணற்றில் குதித்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் சூர்யாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து இளைய மகன் உதயகுமார் உடலையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். லட்சக்குமார் உடலை தேடி வருகின்றனர்.
குடும்ப பிரச்சனையில் சூர்யா, 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அந்த பகுதி பொதுமக்கள் ஏரிக்கரையில் திரண்டனர்.
- ஒருவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த தேசூர் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணபிரான் மற்றும் முனிராஜ். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு தேசூரில் இருந்து காரில் வந்தவாசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை கண்ணபிரான் ஓட்டி சென்றார்.
வந்தவாசி அடுத்த சத்யா நகர் பகுதி அருகே வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த கண்ணபிரான் மற்றும் முனிராஜ் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்துக்குள்ளான காரில் இருந்த முனிராஜ் வெளியே மீட்டனர்.
கண்ணபிரான் மட்டும் காரில் சிக்கி கொண்டு வெளியே வர முடியாது நிலை ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கும், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி காரின் பக்கவாட்டு கதவை உடைத்து சிக்கி கொண்டி ருந்த கண்ணபிரானை மீட்டனர். பின்னர் பலத்த காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணபிரான் பரிதாபமாக இறந்தார். முனிராஜிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் போலீசார் கண்ண பிரான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு பூஜைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அடுத்த இஞ்சிமேடு, வரதராஜ, பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திரம் மகாயாகம் நடந்தது.
காலையில் பாலாஜி, பட்டர் தலைமையில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார் சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், சீதாதேவி, ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, திருமஞ்சனம் செய்தனர். 27 சுவாதி நட்சத்திரம் மகா கோலம் பல்வேறு வண்ண அரிசி மூலம் வரையப்பட்டு. பல்வேறு மூலிகைகள் மூலம் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது.
இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகிகள் பாலாஜி, வேங்கடநாதன், ஆகியோர் செய்து இருந்தனர்.
- சித்ரா பவுர்ணமி வருவதையொட்டி ஏற்பாடு
- அடிப்படை வசதிகள் செய்வது குறித்து ஆலோசனை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அரு ணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர் கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் உள்ளூர் மட்டு மின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்று அருணாசலேஸ் வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நாட்களில் பக்தர்கள்கோவில் உள்பிரகாரம் மட்டு மின்றி கோவிலின் வெளிபுறத் திலும், மாட வீதி வரையும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அப்போது பக் தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி முதல் 5 மணி நேரத்திற்கு மேல் ஆவதாக கூறப்படுகிறது. இதனால் பக் தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் வரிசையை முறைப்படுத்த வேண்டும் என்றும், நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற் கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த மாதம் சித்ரா பவுர்ணமி வருகிறது. சித்ரா பவுர்ணமியின் போது திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மேலும் கோவிலிலும் சாமி தரிசனம் செய்வார்கள்.
இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விரைந்து தரிசனம் மேற் கொள்ள வேண்டிய வழிமுறைகள் 'குறித்து இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி குமரகுருபரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
பவுர்ணமி நாட்களில் பக்தர்களை நீண்ட நேரம் வரி சையில் நிற்க வைக்காமல் ஆயிரங்கால் மண்டபம் உள் பட குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்வது குறித்தும் அதிகாரி ஆய்வு செய்து கோவில் அலுவலர்களிடம் அவர் ஆலோசனை வழங்கினார்.
கோவில்இணை ஆணையர் குமரேசன், விழுப்புரம் இணை ஆணையர் சிவக்குமார் மற்றும் கோவில் அலு வலர்கள். பணியாளர்கள் உடனிருந்தனர்.






