search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி
    X

    திருவண்ணாமலை தாமரை குளத்தில் அருணாசலேஸ்வரர் பாலிகை விடும் நிகழ்ச்சியில் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி

    • மங்கள வாத்தியங்கள் முழங்க சாமி ஊர்வலம்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பங்குனி உத்திர விழாவையொட்டி திருவண்ணாமலை தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவையொட்டி அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்தார்.

    கடந்த 4-ந் தேதி பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி கோவிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தாசினம் செய்தனர். அன்று இரவு கோவில் கொடிமரம் முன்பு அருணாச லேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கல்யாண மண்டபத்தில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    கடந்த 6-ந் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் நலங்கு உற்சவம், திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. அதைதொடர்ந்து நேற்று விழா நிறைவாக மதியம் சுமார் 12 மணியளவில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்கரத்தில் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் திருக்கல்யாணத்தின் போது வைக்கப்பட்ட முளைத்த நவதானியங்களை குளக்கரையில் உள்ள தொட்டியில் கரைத்து குளத்தில் விட்டனர்.

    பின்னர் தாமரை குளம் ராஜா மண்டபத்தில் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் அங்கிருந்து கோவிலுக்கு சாமி புறப்பாடு நடைபெற்றது.

    தொடர்ந்து குமரக்கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×