என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வது குறித்து அதிகாரி ஆய்வு
- சித்ரா பவுர்ணமி வருவதையொட்டி ஏற்பாடு
- அடிப்படை வசதிகள் செய்வது குறித்து ஆலோசனை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அரு ணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர் கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் உள்ளூர் மட்டு மின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்று அருணாசலேஸ் வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நாட்களில் பக்தர்கள்கோவில் உள்பிரகாரம் மட்டு மின்றி கோவிலின் வெளிபுறத் திலும், மாட வீதி வரையும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அப்போது பக் தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி முதல் 5 மணி நேரத்திற்கு மேல் ஆவதாக கூறப்படுகிறது. இதனால் பக் தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் வரிசையை முறைப்படுத்த வேண்டும் என்றும், நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற் கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த மாதம் சித்ரா பவுர்ணமி வருகிறது. சித்ரா பவுர்ணமியின் போது திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மேலும் கோவிலிலும் சாமி தரிசனம் செய்வார்கள்.
இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விரைந்து தரிசனம் மேற் கொள்ள வேண்டிய வழிமுறைகள் 'குறித்து இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி குமரகுருபரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
பவுர்ணமி நாட்களில் பக்தர்களை நீண்ட நேரம் வரி சையில் நிற்க வைக்காமல் ஆயிரங்கால் மண்டபம் உள் பட குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்வது குறித்தும் அதிகாரி ஆய்வு செய்து கோவில் அலுவலர்களிடம் அவர் ஆலோசனை வழங்கினார்.
கோவில்இணை ஆணையர் குமரேசன், விழுப்புரம் இணை ஆணையர் சிவக்குமார் மற்றும் கோவில் அலு வலர்கள். பணியாளர்கள் உடனிருந்தனர்.






