என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The boy drowned in the lake and died"

    • நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாணாபுரம்:

    வெறையூர் அருகே உள்ள சு.நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகன் பிரதீப் (வயது 5). இவன் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×