என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வந்தவாசி அருகே கார் மீது பால் லாரி மோதி திண்டிவனம் தாசில்தார் மரணம்
- மேல்மருவத்தூரில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.
- நெடுங்கல் கூட்ரோடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
செய்யாறு:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (வயது 54).
திண்டிவனத்தில் தாசில்தாரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை (48). இவர்களது மகன் சிவசங்கரன்.
இவர்கள் 3 பேரும் காரில் நேற்று காலை காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றனர். காரை சிவசங்கரன் ஓட்டி சென்றார். தரிசனம் முடித்து விட்டு ஊருக்கு திரும்பினார். இரவு 10 மணி அளவில் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் செய்யாறு அடுத்த நெடுங்கல் கூட்ரோடு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மேல்மருவத்தூரில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.
நெடுங்கல் கூட்ரோடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த வெங்கட சுப்பிரமணியின் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பூங்கோதை, சிவசங்கரன் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடசுப்பிரமணி உடலை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாசில்தார் ஒருவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.