search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of government buses"

    • 2-வது முறையாக நடவடிக்கை
    • செய்யாறு கோர்ட்டில் ஒப்படைத்தனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரியவேளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் சுபா ஷினி (வயது 13). இவர் செய் யாறில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் 27.8.2014 அன்று பள் ளிக்குச் செல்வதற்காக கிரா மத்தில் உள்ள பஸ் நிறுத்தத் தில் அரசு பஸ்சில் ஏற முயன் றார். அப்போது பஸ்சில் சிக்கி சுபாஷினி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    விபத்தில் இறந்த சுபாஷி னிக்கு நஷ்டஈடு தொகை வழங்கக் கோரி அவரது பெற்றோர் சார்பில் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி விபத் தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ.8 லட்சத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப் புரம் மண்டலம் வழங்க வேண்டும் என்று கடந்த 16.10.2019 அன்று உத்தரவிட்டார்.

    2 வருடங்களுக்கு மேலாகியும் நஷ்டஈடு வழங்காததால் சுபாஷினியின் பெற்றோர் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவின் பேரில் விசாரணை மேற்கொண்ட சார்பு நீதிபதி குமரவர்மன். நஷ்டஈடு தொகையை அச லும், வட்டியுமாக சேர்த்து ரூ.14.35 லட்சத்தை போக்குவரத்துக் கழகம் செலுத்த வேண் டும் என்றும். தவறினால் அரசு பஸ் ஜப்தி செய்யப்படும் என்று கடந்த 29.8.2022 அன்று உத்தரவிட்டு இருந் தார்.

    அந்த உத்தரவின் பேரில் 2.9.2022 செய்யாறிலிருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    உடனே போக்குவரத்து கழகம் சார்பில் விபத்தில் இறந்த மாணவியின் பெற்றோரிடம் நீதிமன்றம் உத்தரவிட்ட நஷ்டஈடு தொகையில் ரூ.13.64 லட்சத்தை செலுத்தி விட்டு பஸ்சை மீட்டுச் சென்றனர்.

    மீதி தொகையான ரூ.72 ஆயிரத்தை மனுதாரருக்கு போக்குவரத்துக் கழகம் வழங்காத காரணத்தால், 2-வது முறையாக செய்யாறு பஸ் நிலையத்தில் சேலம் செல்ல இருந்த அரசு பஸ்சை நீதி மன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து செய்யாறு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • செய்யாறில் விபத்தில் பெண் பலி
    • பஸ் கோர்ட்டில் ஒப்படைப்பு

    செய்யாறு:

    செய்யாறு தாலுகா அனக்காவூர் கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி, வனஜா, கூலித் தொழிலாளி இவர் கடந்த 11.4.2008 அன்று வேலைக்குச் சென்று விட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டு இருந்தார்.

    ஞான முருகன்பூண்டி கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த வனஜா செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், விபத்தில் இறந்த வனஜாவின் கணவர் முருகன் மற்றும் மகன் ராஜசேகர், மகள்கள் விஜயசாந்தி சுமதி ஆகியோர் நஷ்டஈடு வழங்கக்கோரி செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி மனுதாரர்க ளுக்கு விபத்துக்கு நஷ்டஈடாக ரூ.13 லட்சத்து 14 ஆயிரம் வழங்க வேண்டும் என்று 25.3.19 அன்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மனு தாரர்கள் தரப்பில் சார்பு நீதி மன்றத்தில் நஷ்டஈடுத் தொகையை வழங்க நிறை வேற்று மனுவைத் தாக்கல் செய்தனர்.

    அதன்பேரில் அசலும் வட்டியும் சேர்த்து ரூ. 27 லட்சத்து 34 ஆயிரத்து 335-ஐ. மனுதாரர் குடும்பத்திற்கு அரசுபோக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் சார்பு நீதிபதி குமாரவர்மன் உத்தரவிட்டார்.

    ஆனால் போக்குவரத்துக் கழகத்தினர் நஷ்டஈடுத் தொகை வழங்காததால் நேற்று மதியம் செய்யாறு பஸ் நிலையத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து சேலம் செல்லஇருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • விபத்தில் சிக்கியவருக்கு நிவாரணம் வழங்காததால் நடவடிக்கை
    • கோர்ட்டில் ஒப்படைத்தனர்

    ஆரணி:

    கலசபாக்கம் அடுத்த அணியாலை கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 27) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு பஸ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

    இதனையடுத்து சம்பத் ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பத் என்பவருக்கு ரூ.7லட்சத்து 54ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் ஆரணி நீதிமன்ற நீதிபதி தாவூத் அமால் உத்தரவு பிறப்பித்தார்.

    இதன் மேல்முறையீடு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு 7லட்சத்து 54ஆயிரத்து 239 ரூபாய் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கபட்டது.

    நிவாரண தொகையை இதுவரையில் வழங்காத காரணத்தினால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காலையில் ஆரணி பழைய பஸ் நிலையத்தில் 202 தடம் எண் கொண்ட அரசு பஸ்சை நீதிமன்ற அலுவலர் துரை தலைமையில் ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

    • விபத்து இழப்பீடு தொகை வழங்காததால் நடவடிக்கை
    • பஸ்சை கோர்ட்டில் ஒப்படைத்தனர்

    செய்யாறு:

    வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி. இவர், கடந்த 2015-ம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    லூர்துசாமி இழப்பீடு கேட்டு செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குமார வர்மன் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட லூர்துசாமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 30 வழங்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.

    நீதிமன்ற உத்தரவின்படி லூர்துசாமிக்கு இழப்பீடு தொகை வழங்காததால், செய்யாறு பஸ் நிலையத்தில் சென்னைக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை சார்பு நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • பஸ் மரத்தில் மோதி விவசாயி பலியான வழக்கில் நடவடிக்கை
    • குடியாத்தம் பஸ் நிலையத்தில் பரபரப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஊராட்சி ஜங்காலபள்ளி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 52) விவசாயி.

    கடந்த 2015-ஆம் ஆண்டு மணி அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருக்கும்போது கே.வி.குப்பம் அடுத்த கொசவன்புதூர் கிராமம் அருகே சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி பஸ் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனைத் தொடர்ந்து விபத்தில் பலியான மணியின் மகன்கள் அசோக்குமார், வேலு, மகள்கள் சத்யா, பவித்திரா ஆகிய 4 பேரும் குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரணை செய்த குடியாத்தம் சார்பு நீதிபதி 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மணியின் வாரிசுதாரர்களுக்கு 11 லட்சத்து 82ஆயிரத்து 342 ரூபாய் இழப்பீடாக வழங்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

    அரசு போக்குவரத்து நிர்வாகம் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனையடுத்து சார்பு நீதிபதி ஜி.பிரபாகரன் இழப்பீட்டு தொகையை வசூலிக்கும் பொருட்டு குடியாத்தம் அரசு டவுன் பஸ்சை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.

    நேற்று காலையில் சார்பு நீதிமன்ற முதுநிலை கட்டளையாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் எஸ்.தேவராஜ், பி.ஆனந்தராஜ், மணியின் வாரிசுதாரர்கள் ஆகியோர் குடியாத்தத்தில் இருந்து பரவக்கல் செல்லும் டவுன் பஸ்சை பயணிகளுடன் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே நிறுத்தி ஜப்தி செய்தனர்.

    தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வழக்கறிஞர் மூலம் சார்பு நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர் விரைவில் இழப்பீட்டு தொகை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

    அதனை ஏற்றுக் கொண்ட சார்பு நீதிபதி ஜி. பிரபாகரன் வரும் 8-ந் தேதிக்குள் மணியின் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு டவுன் பஸ்சை விடுவித்தார்.

    குடியாத்தத்தில் பயணிகளுடன் டவுன் பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×