என் மலர்
உள்ளூர் செய்திகள்

முருகர்கோவில் கும்பாபிஷேகம்
- சிறப்பு பூஜைகள் நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே முருகர்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் அடுத்த ராயம்பேட்டை கிராமத்தில்மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விநாயகர், முருகர், பரிவாரதேவதைகள், சக்திவேல், கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்தும், கலசங்கள் அமைக்கப்பட்டும் யாக பூஜைகள் நடந்தது.
சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத பூஜைகள் நடத்தப்பட்டு, மேள தாளத்துடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, தீபாரனை செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், மூலவர் முருகபெருமானுக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தொடர்ந்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சக்திவேல், காவடி, உற்சவதிருத்தேர், செடல் ஊர்வலம் என பக்தர்கள் ராயம்பேட்டை கிராமத்தில் வீதி உலா வந்தனர்.
நிகழ்ச்சியில், அருணை குழுமம் எ.வ.வே.கம்பன், கீழ்பென்னாத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி எ.எஸ்.ஆறுமுகம், அதிமுக ஒன்றிய செயலாளர் தொப்பளான் மற்றும் கிராம பிரமுகர்கள், பொதுமக்கள், திருப்பணி குழுவினர்கள், விழாக்குழுவினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






