சைக்கிள் மீது ஆட்டோ மோதி தொழிலாளி பலி

வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது பரிதாபம் போலீசார் விசாரணை
சைக்கிள் மீது ஆட்டோ மோதி தொழிலாளி பலி
Published on

வெம்பாக்கம்:

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் அனுமந்தபேட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70). கூலி தொழிலாளி.

இவர் தினமும் சைக்கிளில் காஞ்சீபுரத்தில் வேலைக்கு சென்று திரும்பி வருவது வழக்கம். நேற்று முன்தினம் முத்துசாமி வேலை முடிந்ததும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் வந்த போது பின்னால் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ இவரது சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தது கிடந்தார்.

தகவல் அறிந்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த முத்துசாமியை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி அம்புஜம் அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com