என் மலர்
திருவள்ளூர்
- நந்தவனம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி விக்கி ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் பனைவிதைப்பு பணியை துவக்கி வைத்தனர்.
- ஊராட்சி செயலளார், மக்கள் நலப்பணியாளர் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
சோழவரம் ஒன்றிம் நெற்குன்றம் ஊராட்சியில் தூய்மை இந்தியாவின், இருவார தூய்மை அனுசரிப்பு மற்றும் பசுமை மையமாக்கல் திட்டத்தின் கீழ் பனைவிதை விதைக்கும் பணி மற்றும் பனைபொருள் உற்பத்தி பனை கைவினை பொருட்கள் பயிற்சி குறித்த விழிப்புணர்வு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையிலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் ஜி. யோகன்குமார் மற்றும் துணை பொது மேலாளர் கே.வி.வி.சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி மற்றும் நந்தவனம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி விக்கி ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் பனைவிதைப்பு பணியை துவக்கி வைத்தனர்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட பனை விதை வங்கியின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஊராட்சியில் விதைப்பு பணியில் ஈடுபடும் பொதுமக்களுக்கு பனை விதைப்பு பணியை மேற்கொள்ளும் விதம் மற்றும் பனை சார்ந்த கைத்தொழில்கள் பயிற்சி குறித்தும், பனையினுடைய மதிப்பு கூட்டு பொருட்களின் உற்பத்தி, அதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் வருங்காலங்களில் பெறக்கூடிய வருவாய் வழிமுறைகளை எடுத்துரைத்தார். மேலும், இந்நிகழ்சியில், நெற்குன்றம் ஊராட்சியின் வார்டு உறுபினர்கள், ஊராட்சி செயலளார், மக்கள் நலப்பணியாளர் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்த்திகாபானு நன்றி கூறினார்.
- எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமை தாங்கினார்.
- மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,கோடுவெளி, தண்டலம்,பெரியபாளையம், கன்னிகைப்பேர், தாமரைப்பாக்கம், கன்னிகாபுரம், இலட்சிவாக்கம், ஆத்துப்பாக்கம், காக்கவாக்கம், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 25 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2 லட்சத்தி 65 ஆயிரம் தொகையில் 15-ம் நிதி குழு மானியம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.66 லட்சத்து 25 ஆயிரம் தொகையில் மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமை தாங்கினார். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பி.ஜே.மூர்த்தி, துணைப்பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளரும், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு 25 ஊராட்சிகளுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் கே.வி.லோகேஷ், ஆ.சத்தியவேலு, தங்கம் முரளி,வக்கீல்கள் எ.சீனிவாசன், முனுசாமி,வடமதுரை அப்புன், வெங்கல் வி.ஜே.சீனிவாசன்,கோடுவெளி குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் உதயசங்கர் நன்றி கூறினார்.
- நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.
- கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான 90 சென்ட் நிலம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.
இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் செயல் அலுவலர் தலைமையில் கோவில் ஊழியர்கள் வந்தனர்.
அவர்கள் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. மூலம் அதிரடியாக அகற்றிமீட்டனர். மேலும் அங்கிருந்த கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். முன்னதாக ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- சந்தேகம் அடைந்த கீர்த்தனா எண்ணூர் போலீசில் புகார் செய்தார்.
- பக்கத்துவீட்டில் வசிக்கும் அழகுநிலையத்தில் வேலைபார்த்து வரும் ஜான்சிராணி என்பவர் நகை திருடியது தெரிந்தது.
எண்ணூர், சிவன் படை வீதி பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தனா. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவரது வீட்டில் இருந்த 7 பவுன் நகை மாயமாகி இருந்தது. ஆனால் பீரோ உடைக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கீர்த்தனா எண்ணூர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் சுதாகர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது பக்கத்துவீட்டில் வசிக்கும் அழகுநிலையத்தில் வேலைபார்த்து வரும் ஜான்சிராணி (34) என்பவர் நகை திருடியது தெரிந்தது. அவர் அங்குள்ள சகோதரி ஒருவரை பார்க்க வருவதை போல் நடித்து பூட்டிய வீட்டின் அருகில் வைக்கப்பட்டு இருந்து சாவியை எடுத்து நகையை திருடி சென்று இருப்பது தெரிந்து.
இதேபோல் அருகில் உள்ள பால்ராஜ் என்பவரது வீட்டிலும் 28 பவுன் நகையை ஜான்சிராணி சுருட்டி உள்ளார். அங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததால் சிக்காமல் இருந்தார். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள.
- ரேசன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது.
- கணக்கெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
பொன்னேரி:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார் தகுதியான வர்கள் என்ற விதிமுறை களையும் ஏற்கனவே அரசு அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து ரேசன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் சுமார் 250 பேருக்கு திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதி உள்ளவர்கள் தகுதி இல்லாதவர்கள் குறித்த விளக்கமும், கணக்கெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
இதில் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், தாசில்தார் செல்வகுமார், துணை தாசில்தார் சிவகுமார், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உணவு சத்துணவு பணியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார்.
- கவுன்சிலர்கள், சகாதேவன், வெற்றி, ரமேஷ், தமின்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மீஞ்சூரில் ஒன்றியகுழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில்நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சுமித்ரா குமார் பேசும்போது, காலை உணவு சத்துணவு பணியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். இதில் கவுன்சிலர்கள், சகாதேவன், வெற்றி, ரமேஷ், தமின்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
- பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. கும்மிடிப்பூண்டி, காட்டுப்பள்ளி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனங்கள்அதிகரித்து வரும் நிலையில் பொன்னேரி பகுதிகளில் வெளியூர்களில் இருந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தற்போது வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் அதிகமானோர் வசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
பொன்னேரி காவல் நிலைய எல்லையான, 8 கி.மீ., சுற்றளவு பகுதிக்குள், 15 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 44 பெரிய கிராமங்கள், 22 சிறு கிராமங்கள் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகள், ஆண்டார் குப்பம் மேட்டுப்பாளையம், ஆசான புதூர், பெரும்பேடு குப்பம். ஏலியம்பேடு, உள்ளிட்ட சுமார் 80 கிராமங்கள் வருகின்றன.
பொன்னேரி போலீஸ் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர், 33 காவலர்கள் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 4 காவலர்கள் என, மொத்தம், 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
போலீஸ் பற்றாக்குறையால், பொன்னேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு, குற்றசம்பவங்கள், சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே போலீஸ் பற்றாக்குறையை நீக்கி, இரவு ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஹரிஹரனிடம் கேட்ட போது அவர் இளம்பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் குளியல் அறையில் குளிக்கசென்றார்.
அப்போது குளியலறை ஜன்னலில் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த செல்போனில் வீடியோபதிவாகி கொண்டு இருந்தது. விசாரணையில் அந்த செல்போன் எதிர்வீட்டில் வசிக்கும் ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் அதனை அவர் குளியல் அறை ஜன்னலில் வைத்து வீடியோ எடுத்தது தெரிய வந்தது.
இதுபற்றி ஹரிஹரனிடம் கேட்ட போது அவர் இளம்பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் அருகே பழவேற்காடு கடல் உள்ளது.
- பழவேற்காட்டை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் இந்த கடல் பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம்.
பொன்னேரி:
நிலவில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக சந்திராயன் -3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடித்து உள்ளனர். முன்எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் அருகே பழவேற்காடு கடல் உள்ளது. வழக்கமாக பழவேற்காட்டை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் இந்த கடல் பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். சந்திராயன்-3 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடாக பழவேற்காடு மற்றும் சுற்றுவட்டார மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
- தகராறில் அப்புனை கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டி விட்டு நண்பர்கள் தப்பி ஓடி விட்டனர்.
- பலத்த காயம் அடைந்த அப்புன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர்அப்புன் (28). இவர் வெள்ளோடை ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன் மது குடித்தார். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த தகராறில் அப்புனை கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டி விட்டு நண்பர்கள் தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அப்புன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- பலத்த காயம் அடைந்த அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்தனர்.
பூந்தமல்லி:
திருவேற்காடு அருகே உள்ள காடுவெட்டி, ஆவடி சாலையை சேர்ந்தவர் நந்தகோபால். பால்வியாபாரி. இவருக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதி ராமலிங்கம் நகரை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் லாரிகளை நிறுத்தி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தேவேந்திரன் அவரது அலுவலக வாசலில் பைக் மீது கால் மீது கால்போட்டு அமர்ந்த படி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த இடத்தின் உரிமையாளர் நந்தகோபால் திடீரென தகராறில் ஈடுபட்டார். நான் வரும்போது மரியாதை கொடுக்காமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு செல்போன் பேசுகிறாயே என்று கூறி தேவேந்திரனின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவேற்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்தனர்.
- சென்னை மார்க்கத்தில் சுமார் 30 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
- மாணவரை கண்டுபிடித்த ரெயில்வே போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.
அம்பத்தூர்:
அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை விரைவு மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயிலில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இந்த விரைவு மின்சார ரெயில் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நிற்காது.
இந்த நிலையில் காலை 8:15 மணியளவில் கொரட்டூர் ரெயில் நிலையத்திற்கு அருகில் வந்தபோது ஒரு பெட்டியில் பயணம் செய்த கல்லூரி மாணவர் திடீரென அவசர கால அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் சென்னை மார்க்கத்தில் சுமார் 30 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
அபாய சங்கிலியை பிடித்து இழுத்த கல்லூரி மாணவரை கண்டுபிடித்த ரெயில்வே போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.






