கால்மேல் கால்போட்டு இருப்பதா? டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் மீது தாக்குதல்- பால் வியாபாரி கைது

பலத்த காயம் அடைந்த அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்தனர்.
கால்மேல் கால்போட்டு இருப்பதா? டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் மீது தாக்குதல்- பால் வியாபாரி கைது
Published on

பூந்தமல்லி:

திருவேற்காடு அருகே உள்ள காடுவெட்டி, ஆவடி சாலையை சேர்ந்தவர் நந்தகோபால். பால்வியாபாரி. இவருக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதி ராமலிங்கம் நகரை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் லாரிகளை நிறுத்தி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தேவேந்திரன் அவரது அலுவலக வாசலில் பைக் மீது கால் மீது கால்போட்டு அமர்ந்த படி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த இடத்தின் உரிமையாளர் நந்தகோபால் திடீரென தகராறில் ஈடுபட்டார். நான் வரும்போது மரியாதை கொடுக்காமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு செல்போன் பேசுகிறாயே என்று கூறி தேவேந்திரனின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவேற்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com