அபாய சங்கிலியை இழுத்து மின்சார ரெயிலை நிறுத்திய கல்லூரி மாணவர்- ரெயில்சேவை பாதிப்பு

சென்னை மார்க்கத்தில் சுமார் 30 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. மாணவரை கண்டுபிடித்த ரெயில்வே போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.
அபாய சங்கிலியை இழுத்து மின்சார ரெயிலை நிறுத்திய கல்லூரி மாணவர்- ரெயில்சேவை பாதிப்பு
Published on

அம்பத்தூர்:

அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை விரைவு மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயிலில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இந்த விரைவு மின்சார ரெயில் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நிற்காது.

இந்த நிலையில் காலை 8:15 மணியளவில் கொரட்டூர் ரெயில் நிலையத்திற்கு அருகில் வந்தபோது ஒரு பெட்டியில் பயணம் செய்த கல்லூரி மாணவர் திடீரென அவசர கால அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் சென்னை மார்க்கத்தில் சுமார் 30 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

அபாய சங்கிலியை பிடித்து இழுத்த கல்லூரி மாணவரை கண்டுபிடித்த ரெயில்வே போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com